For Daily Alerts
Just In
சென்னையில் வீட்டில் தனியே இருந்த பெண் கொலை: நகைகள் கொள்ளை

ஹார்லிக்ஸ் சூப்பர் கிட்ஸ் அவார்ட்ஸ்- வீடியோ
சென்னை:
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கொன்று ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகைகள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சென்னை புறநகர்ப் பகுதியான ராமபுரம் நடேசன் நகரைச் சேர்ந்தவர் வீரராகவன். இவரது மனைவி கஸ்தூரி.நேற்றிரவு வீரராகவன் வெளியே சென்றிருந்தார். கஸ்தூரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது இவரது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் கஸ்தூரியை அடித்துக் கொலை செய்தனர். பின்னர்வீட்டில் இருந்த ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடிக் கொண்டு தப்பிவிட்டனர். இது தொடர்பாகபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


