வி.எச்.பி. பேரணி: அயோத்திக்கு தமிழகத்திலிருந்து 3,000 பேர் பயணம்
சென்னை:
விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் பேரணியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து அந்த அமைப்பைச்சேர்ந்த 3,000 பேர் இன்று அயோத்திக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.
ராமருக்கு கோவில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில், வரும் 17 ம் தேதி விஷ்வ ஹிந்து பரிஷத் பேரணியைநடத்துகிறது.
இதில் பங்கேற்க தமிழகத்திலிருந்து 3,000 பேர் செல்கின்றனர். முதல் கட்டமாக நேற்று கோவையிலிருந்துகோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கோவை மாவட்ட வி.எச்.பி. அமைப்பாளர் சதானந்தம் தலைமையில் ஒரு குழுஅயோத்தி புறப்பட்டது.
இன்று (திங்கள்கிழமை) மாலை சென்னையில் இருந்து கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் மூலம் வி.எச்.பி.யின் அகிலஉலக தலைவர் வேதாந்தம் தலைமையில் இன்னொரு குழு செல்கிறது. மேலும் இன்றைய சென்னை- வாரணாசிஎக்ஸ்பிரஸ் ரயிலிலும் ஒரு குழுவினர் செல்கின்றனர். இந்தகத் குழு மாநில இளைஞரணி அமைப்பாளர் நெல்லைவீரபாகு மற்றும் மதுரை மாவட்ட வி.எச்.பி. தலைவர் சின்மயா தலைமையில் செல்கிறது.


