இன பிரச்சனை: அன்னிய நாடுகள் தலையீட்டை தவிர்க்க முடியாது- ரணில்
கொழும்பு:
இலங்கை இனப் பிரச்சனையில் அன்னிய நாடுகளின் தலையீடு கூடாது என்ற வாதத்தை ஏற்கவே முடியாது எனஅந் நாட்டுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.
கொழும்பில் இந்தியப் பெருங்கடல் தொடு நாடுகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில் உரையாற்றிய ரணில்கூறியதாவது:
விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டதே சர்வதேச நாடுகளின் நெருக்குதல் காரணமாகத் தான்.இல்லாவிட்டால் பேச்சுவார்த்தைக்கே புலிகளை நம்மால் அழைத்து வந்திருக்கவே முடியாது. அப்படி இருக்கையில்அன்னிய நாடுகளின் தலையீடு இல்லாமல் பிரச்சனையை எப்படித் தீர்க்க முடியும்.
இதனால் நாட்டின் சுதந்திரத்துக்கு ஆபத்து வந்துவிட்டதாக சிலர் (அதிபர் சந்திரிகா) கூறுவதை ஏற்க முடியாது.
இப்போது வட-கிழக்குப் பகுதியில் இடைக்கால நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தங்களதுபிரதிநிதிகளுடன் வெளிநாட்டில் புலிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிகாரப் பகிர்வு குறித்து அரசிடம்இதுவரை அவர்கள் எந்த திட்ட வரையறையையும் தரவில்லை.
ஆனால், அது குறித்து தங்களுக்குள் ஆலோசித்து வருகின்றனர். அவர்கள் வகுக்கும் திட்டம் இலங்கைக்கு மிகஉகந்ததாக இருக்கலாம். இல்லாமலும் கூட இருக்கலாம்.
ஆனால், புலிகள் இப்போது பேச்சுவார்த்தைக்கு வந்ததும், அதிகாரப் பகிர்வு குறித்த திட்ட வகுப்பதில் இறங்கியதும்சர்வதேச நாடுகளின் ஆதரவு காரணமாகத் தான். அதை யாரும் மறுக்க முடியாது என்றார்.


