For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைச்சர் வ.து. நடராஜன் திடீர் நீக்கம்: ஜெ. அதிரடி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சமீபத்தில் இரண்டாவது முறையாக அமைச்சராக்கப்பட்ட வ.து.நடராஜனை மீண்டும் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்முதல்வர் ஜெயலலிதா. பதவியேற்ற 44வது நாளில் தனது பதவியை இவர் இழந்துள்ளார்.

ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அடிக்கடி அமைச்சர்கள் மாற்றம் சகஜம் தான். சமீபத்தில் தொழிலாளர்நலத்துறை அமைச்சராக இருந்த அன்வர்ராஜா நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அந்தத் துறைக்குவ.து.நடராஜன் நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்.

இந் நிலையில் திடீரென்று வ.து.நடராஜன் நேற்று இரவு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அவர் வகித்து வந்த தொழிலாளர் நலம், வேலைவாய்ப்பு, ஊரக மற்றும நகர்ப்புற வேலைவாய்ப்பு, வக்பு வாரியம்உள்ளிட்ட துறைகள் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வநாதனிடம் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் இந்தத் தகவல்கள் தெவிக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக அமைச்சரை நீக்க ஆளுநரை முதல்வர் சந்திப்பது வழக்கம். ஆனால், இந்த முறை ஆளுநருக்கு பேக்ஸ்அனுப்பி அதன் மூலமே வ.து. நடராஜனின் பதவியைப் பறித்துள்ளார் ஜெயலலிதா.

வ.து.நடராஜன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டார். ஆனால் 9மாதங்களுக்குப் பிறகு அவர் தனது பதவியை இழந்தார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகுகடந்த மாதம் 4ம் தேதி மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றார். இந் நிலையில் திடீரென்று அவர் பதவி நீக்கம்செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் தொழிலாளர் நல ஆணைய மாநாடு நடந்தது. அதில் பேசிய பிரதமர் வாஜ்பாய், அரசுஊழியர் வேலைநிறுத்தம் செய்ய உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பில் தனக்கு உடன்பாடுஇல்லை என்று கூறியிருந்தார். அந்த மாநாட்டில் வ.து.நடராஜனும் கலந்து கொண்டார்.

பிரதமரின் கருத்துக்கு நடராஜன் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் அல்லது கூட்டத்தை புறக்கணிப்புசெய்திருக்க வேண்டும் என்று முதல்வர் எதிர்பார்த்ததாகவும், ஆனால் நடராஜன் எந்தவித எதிர்ப்பும்தெரிவிக்காமல் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டதால் ஜெயலலிதா இந்த அதிரடி நடவடிக்கையைஎடுத்திருப்பதாகவும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஜெயலலிதா அமைச்சரவையில் மேற்கொள்ளப்படும் 13-வது அமைச்சரவை மாற்றம் இது என்பதுகுறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வ.து. நடராஜனுக்கும் அன்வர்ராஜாவுக்கும் இடையே பனிப்போர் நடந்துவருகிறது. அன்வர் ராஜா மீது தனது மாவட்ட அதிமுகவினரை விட்டு புகார்களைக் குவித்து அவரது பதவிக்குஆப்பு வைத்தார் நடராஜன். இதனால் அவர் பதவி இழந்தார். இந் நிலையில் வ.துவின் பதவியும் போய்விட்டது.

இப்போது அமைச்சர்களின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. ஜெயலலிதாவின் ராசிப்படி கூட்டுத் தொகை (2 +7) 9ஆக இருக்கும் வகையில் அமைச்சர்களின் எண்ணிக்கை இருந்து வந்துள்ளது. இதனால் விரைவில் ஒரு அமைச்சர்சேர்க்கப்படுவார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X