For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக இசையின் பீஷ்ம பிதாமகன் செம்மங்குடி சீனிவாச ஐயர் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Semmangdi Seenivasa Iyerபிரபல கர்நாடக இசைக் கலைஞர் செம்மங்குடி சீனிவாச ஐயர் இன்று காலமானார்.

96 வயதான அவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை 10.30 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள்உள்ளனர்.

அவரது மரணச் செய்தி கேட்டதும் பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் ஜேசுதாஸ், உன்னி கிருஷ்ணன் மற்றும்பிற இசைக் கலைஞர்கள் அவரது வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

1908ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் செம்மங்குடி அருகே திருக்கொடிக்காவல் கிராமத்தில்மிகப் பிரபலமான இசைக் குடும்பத்தில் பிறந்த சீனிவாச ஐயர், கர்நாடக இசையுலகின் பீஷ்ம பிதாமகனாகக்கருதப்பட்டவர்.

1948ம் ஆண்டில் மியூசிக் ஆகாடெமியின் சங்கீத கலாநிதி பட்டத்தைப் பெற்றார். இளம் வயதில் அந்தப் பட்டம்பெற்ற முதல் நபர் செம்மங்குடி தான். மத்திய அரசின் பத்மபூஷன் உள்பட நாட்டின் மிக உயரிய இசைவிருதுகளைப் பெற்றவர்.

மறைந்த திருவாங்கூர் மகாராஜா சுவாதித் திருநாள் எழுதிய கீர்த்தனைகளுக்கு இசை வடிவம் தந்தவர் சீனிவாசஐயர் தான். திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான கலைஞராக இருந்தவர்.

திருப்பதி கோவிலின் ஆஸ்தான கலைஞராகவும் இருந்த செம்மங்குடி. சங்கீத கலாபூஷன் உள்ளிட்ட பல்வேறுவிருதுகளைப் பெற்றுள்ளார்.

சென்னை இசைக் கல்லூரியின் முதல்வர், திருவனந்தபுரம் சுவாதித் திருநாள் இசைக் கல்லூரியின் முதல்வர்,சென்னை வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என பல்வேறு நிலைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர். தென்இந்தியாவின் இசை அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தவர்.

தனது மாமாவான வயலின் இசைத் கலைஞர் கிருஷ்ண ஐயரிடமும், தனது உறவினரான நாராயணசாமி ஐயரிடமும்8 வயதிலேயே இசை பயில ஆரம்பித்தார். பின்னர் கும்பகோணத்தில் கொட்டுவடம் சகராம ராவின் குருகுலத்தில்இசை பயின்றார். அவர் தான் செம்மங்குடியை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரிடம் அறிமுகப்படுத்தி வைத்து இசைகற்க வைத்தார்.

ராகங்களைக் கையாள்வதில் விற்பன்னராகத் திகழ்ந்த சீனிவாச ஐயர் இசையில் கலப்படத்தை அறவே வெறுத்தவர்.இளையாராஜாவின் கர்நாடக இசை ஞானத்தை வெகுவாக பாராட்டி வந்தவர். அதே நேரத்தில் பாலமுரளிகிருஷ்ணாவின் இசையை கடுமையாக விமர்சித்தும் வந்தார்.

தமிழ் இசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர், தமிழக அரசின் கலைமாமணி, மத்திய பிரதேச அரசின் காளிதாஸ்சம்மான் ஆகிய விருதுகளையும் பெற்றவர்.

ஜெயலலிதா இரங்கல்:

செம்மகுடியின் மறைவு தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில், செம்மங்குடி சீனிவாசஅய்யர் கர்நாடக இசை ரசிகர்கள் மத்தியில் தனக்கென நீங்காத இடம் பிடித்திருந்தார். இளம் வயதிலேயேசாதனைகளின் சிகரத்தை அடைந்த அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்தெரிவித்துக் கொள்கிறேன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X