For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொடா: நாடாளுமன்றம் செல்ல வைகோவுக்கு நீதிமன்றம் அனுமதி தருமா?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாடாளுமன்றத்தில் பொடா அவரசச் சட்டம் மீது நடக்கவுள்ள விவாதத்தில் கலந்து கொள்ள தன்னைஅனுமதிக்குமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் அனுமதி கோரினார்.

இதையடுத்து நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்றச் செயலகம் அனுப்பியுள்ளசம்மனின் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் தரும் அவசரச் சட்டத்தை ஜனாதிபதி மூலமாக மத்திய அரசுபிறப்பித்தது. இப்போது நடந்து வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த சட்டம் தொடர்பானமசோதா தாக்கல் செய்யப்படும். இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டு ஓட்டெடுப்பு மூலம் சட்டம்நிறைவேற்றப்படும்.

அடுத்த சில நாட்களில் இந்த விவாதம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நடக்கவுள்ளது.

இந் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தானும் மக்களவை விவாதத்தில் கலந்து கொள்ளஅனுமதிக்க வேண்டும் என்று கோரி பொடா சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள வைகோ கோரியுள்ளார். இதுதொடர்பாக பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் அவர் அவசர மனு தாக்கல் செய்தார்.

இதற்கு முன் சிறையில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்றுள்ளதாகவும்சான்றுகளுடன் மனுவில் வைகோ குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ராஜேந்திரன் இன்று விசாரித்தார்,

அப்போது, நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வைகோவுக்கு அனுப்பப்பட்டுள்ள நாடாளுமன்றசெயலரின் சம்மன் நகலை நீதிமன்றதிதல் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கை வரும்திங்கள்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்க அனுமதி தரப்பட்டால், வைகோ போலீஸ் காவலுடன் டெல்லி அழைத்துச்செல்லப்படுவார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க, இதே போல சிறப்பு அனுமதி பெற்று வைகோ டெல்லி சென்று வந்ததுநினைவுகூறத்தக்கது.

பொடா மறு ஆய்வுக் குழு இன்றும் விசாரணை:

இந் நிலையில் வைகோ மற்றும் நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோரின் கைது குறித்து தமிழக அரசு தாக்கல்செய்துள்ள ஆட்சேப மனு மீது நேற்று ஆய்வு நடத்திய பொடா மறு ஆய்வுக் குழு இன்றும் தொடர்ந்து அந்தமனுவை விசாரிக்கிறது.

தமிழக அரசைக் கேள்வி கேட்க இந்தக் குழுவிற்கே அதிகாரம் இல்லை என்ற தமிழகம் தெரிவித்துள்ளது.

இந்த மனுவை நீதிபதி சகார்யா தலைமையிலான பொடா மறு ஆய்வுக் குழு தள்ளுபடி செய்துவிடும் என்றுதெரிகிறது.

மேலும் இன்று நடக்கவுள்ள இந்தக் குழுவின் கூட்டத்தில் ஆஜராகுமாறு வைகோ மற்றும் கோபாலின்வழக்கறிஞர்களுக்கு சகார்யா உத்தரவிட்டுள்ளார். இவர்களிடம் விசாரணை நடத்த சகார்யா திட்டமிட்டுள்ளதால்,தமிழக அரசின் ஆட்சேபணை மனு தள்ளுபடி ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X