புது தலைமை செயலகம் வழக்கு: கட்டடங்களை இடிக்க 12ம் தேதி வரை தடை
சென்னை:
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எந்தக் கட்டடத்தையும் வருகிற 12ம் தேதி வரை இடிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கோட்டூர்புரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பூமி பூஜையும் நடத்தப்பட்டு விட்டது.
இந் நிலையில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் சி.குப்புராஜ் உள்ளிட்டவர்கள் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதைத் தடை செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டுமானப் பணியோ அல்லது பழைய கட்டடங்களை இடிப்பதையோ மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்தது. அதற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளித்தது.
இந் நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதுள்ள நிலை அப்படியே தொடர வேண்டும் என்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஞானப்பிரகாசம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் பழைய கட்டடங்களை இடிக்க மாட்டோம் என தமிழக அரசு அளித்திருந்த உறுதிமொழியையும் வருகிற 12ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
| இப்போது ஹைதராபாத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவும், சசிகலாவும் வரும் 8ம் தேதி மைசூர் செல்கின்றனர்.
சாமுண்டீஸ்வரி கோவிலுக்குச் செல்லும் அவர்கள் பூஜை முடித்துவிட்டு அங்கிருந்து முதுமலை செல்வார்கள் என்றுகூறப்படுகிறது. முதுமலையில் கோவில் யானைகளுக்கு ஓய்வு தருவதற்காக முகாம் நடத்துவதாகக் கூறி, அவை அடித்து லாரிகளில்ஏற்றி இழுத்துச் செல்லப்பட்டுள்ளன. |
8ம் தேதி பெளர்ணமி என்பதால், அன்றைய தினம் கஜபூஜை நடத்துவது மிகப் பெரும் நலன்களைத் தரும்என்பதால் அன்றைய தினம் முதுமலையில் ஜெயலலிதாவுக்காக கஜபூஜை நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
முதுமலை பகுதி வீரப்பன் நடமாட்டம் உள்ளது என்பதால் இப்போதே அங்கு அதிரடிப்படையினரும்குவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் தொடங்கிய முதுமலை யானைகள் முகாமில் இப்போது 81 யானைகள்(கூட்டுத் தொகை ஜெயலலிதாவுக்கு ராசியான 9) உள்ளன.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!













Click it and Unblock the Notifications