For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2003-ன் நாயகர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

2002ம் ஆண்டை விட அதிக பரபரப்பு நிறைந்ததாக 2003 விளங்கியது.

இந்த ஆண்டில் நிறையவே பேர் நல்ல- கெட்ட செயல்களுக்காக அதிகம் பேசப்பட்டார்கள். அதே போல சார்ஸ்உள்பட உலகைக் குலுக்கிய விஷயங்களும் அதிகம். அவை குறித்த ஒரு பார்வை:

சதாம் உசேன்: எப்படி இருந்த இவர் இப்படி ஆயிட்டார் என்று உலக மக்கள் புருவத்தை உயர்த்தும் அளவுக்கு,படு சீப்பாக அமெரிக்க படையினரிடம் சிக்கினார் சதாம். ஈராக்கின் அசைக்க முடியாத ராஜாவாக இருந்த சதாம்உசேனை, அமெரிக்க படைகள் உலுக்கி எடுத்து விட்டன. ஈராக்கும் வீழ்ந்தது, சதாம் சிக்கினார்.

பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக கூறி ஈராக் மீது படையெடுத்தது அமெரிக்கா. ஆனால், இப்போது ஆயுதம் ஏதும்சிக்காததால் சதாமின் மனித உரிமை மீறல்கள் குறித்து பேச ஆரம்பித்துவிட்டது.

லேடன், லைலா சகோதரிகள்: ஈரான் நாட்டைச் சேர்ந்த இந்த இரு சகோதரிகளும் 2003ம் ஆண்டின் மத்தியில்உலகை குலுக்கியவர்கள். இரு தலைகளும் ஒட்டிப் பிறந்த இந்த சகோதகள், பிரிந்து வாழ ஆசைப்பட்டார்கள்.அதன் விளைவு சிங்கப்பூரில் நடந்த பரபரப்பான அறுவைச் சிகிச்சை.

பிரிந்து வாழ ஆசைப்பட்ட அவர்கள் அறுவைச் சிகிச்சை தொடங்கிய அடுத்த நாளே, அடுத்தடுத்துஉயிழந்தார்கள். 29 ஆண்டு காலம் தலையுடன் சேர்ந்து வாழ்ந்த அவர்கள் 2 நாட்களில் உயிழந்தார்கள். சாவு கூடஅவர்களைப் பிரிக்கவில்லை. இவர்களின் சாவை தேசிய துயரமாக ஈரான் அறிவித்தது.

சார்ஸ்: 2003ம் ஆண்டு உலகை பரபரப்புக்குள்ளாகிய அடுத்த ஐட்டம் சார்ஸ் நோய். சீனாவிலிருந்து உலகம்முழுவதும் வெகு வேகமாக பரவிய இந்த நோய்க்கு 300க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

இந்தியாவிற்குள்ளும் சார்ஸ் எட்டிப் பார்த்தது. ஆனால் இந்தியர்களின் எதிர்ப்பு சக்தியால் பேரழிவை ஏற்படுத்தும்முன் சார்ஸ் ஓடி விட்டது. தமிழகத்தில் ஏழுமலை என்பவருக்கு சார்ஸ் வைரஸ் தாக்கம் இருந்தது. அவரும்உடனடியாக குணப்படுத்தப்பட்டு விட்டார்.

சச்சின் டெண்டுல்கர்: கிரிக்கெட் ஸ்டார் சச்சின் டெண்டுல்கரும் 2003ல் பரபரப்பாக பேசப்பட்டார் - இரண்டுமுக்கிய காரணங்களுக்காக.

அவரது கிரிக்கெட் டெஸ்ட் சத சாதனையைப் பாராட்டி பியட் நிறுவனம் விலை மதிப்பு வாய்ந்த காரை பரிசாகவழங்கியது. அதை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு ரூ. 1 கோடி அளவுக்கு வரிச் சலுகை கேட்டார் சச்சின்.மத்திய அரசும் கொடுத்தது.

ஆனால் இந்தக் கார் சச்சினுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி விட்டது. இத்தனை பெரிய தொகையை வரிச்சலுகையாக அறிவிப்பதா என்று கேட்டு இந்தியாவின் பல நீதிமன்றங்களிலும் வழக்குகள் போடப்பட்டன. பரிசாகவந்த கார் சச்சினுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி விட்டது.

இந்த பிரச்சனையை மூழ்கடிக்கும் வகையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சச்சினின் அட்டகாச ரன்குவிப்பு இந்தியர்களுக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தன. அதிலும் பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்களைசச்சின் துவம்சம் செய்தபோது, சச்சினின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது. உலகக் கோப்பைக் கிரிக்கெட்போட்டிகளில் அதிக ரன் குவித்தவர் என்ற நிலையை அடைந்தார் பெற்றார் சச்சின்.

வைரமுத்து: உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கவிப் பேரரசு வைரத்துவுக்கு 2003ம் ஆண்டு பலவிருதுகளையும் கெளரவத்தையும் தேடிக் கொடுத்தது.

5-வது முறையாக சிறந்த திரைப்பாடலுக்கான தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, சமீபத்தில் கிடைத்த சாகித்ய அகாடமிவிருது என சாதனை படைத்தார் வைரமுத்து.

இத்தனை விருதுகள் கிடைத்தாலும், எனது தமிழ் மொழி என்று செம்மொழியாகவும், மத்திய ஆட்சிமொழியாகவும் அறிவிக்கப்படுகிறதோ அப்போது தான் நான் உண்மையான மகிழ்ச்சியை அடைவேன் என்றுஅடக்கத்துடன் கூறி மனங்களை நனைத்தார் வைரமுத்து.

ஜனனி: மதுரையைச் சேர்ந்த இந்த இளம் பெண் தமிழகத்தையே கலக்கி விட்டார். கஞ்சா கடத்தியதாக கூறி ஜனனி,அவரது தாயார் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாகிய வழக்குகள் வரிசையில் ஜனனி வழக்கும் சேர்ந்து கொண்டது. ஜனனி குறித்துநித்தம் ஒரு கதை பத்திரிக்கைகளில் வந்தது. சின்ன மேடம் என்று அழைக்கப்படும் பெரிய குடும்பத்துபிரச்சனையில் இந்தச் சின்னப் பெண்ணின் தலை உருண்டு வருகிறது.

அரசு ஊழியர் போராட்டம்: இந்தியாவையே அதிர வைத்த மாதமாக ஜூலை திகழ்ந்தது. அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் என சுமார் ஒன்றரை லட்சம் பேரை டிஸ்மிஸ் செய்து இந்தியாவின் கவனத்தை தனது பக்கம்திருப்பினார் ஜெயலலிதா.

யாருமே செய்யத் துணியாத டிஸ்மிஸ் அஸ்திரம் ஜெயலலிதாவுக்கே சாதகமாக அமைந்தது. மக்கள்ஜெயலலிதாவின் நடவடிக்கையை வரவேற்றனர். அரசு ஊழியர்களோ இத்தனை நாட்களாக பாதுகாப்பாக இருந்ததங்களது கோட்டை தூள் தூளாவதைப் பார்த்து அதிர்ந்து போய் நின்றனர்.

வேலைநிறுத்தம் என்பதை இனிமேல் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இரும்புக் கரம் கொண்டுநடவடிக்கை எடுத்தார் ஜெயலலிதா.

ராணி மேக் கல்லூரி: தங்களது கல்லூரியைக் காக்க ராணி மேரிக் கல்லூரி மாணவிகளும் ஆசிரியைகளும்நடத்திய முற்றுகைப் போராட்டம் தமிழகத்தை ஆட்டியது.

நூறாண்டுகளுக்கும் மேல் வயதான ராணி மேக் கல்லூயை இடித்து விட்டு அங்கு தலைமைச் செயலகம் கட்டப்போவதாக ஜெயலலிதா அறிவித்ததும், கல்லூரிக்குள் அமர்ந்து உண்ணாமல், உறங்காமல் தொடர் முற்றுகைப்போராட்டம் நடத்தினர் மாணவிகள். கடைசியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த திமுகவின்டி.ஆர்.பாலுவின் புண்ணியத்தால் கல்லூரி தப்பியது.

முரசொலி மாறன்: திமுக தலைவர் கருணாநிதியின் மனசாட்சியாக இருந்த முரசொலி மாறன் மறைவு அக்கட்சிக்கும் கருணாநிதிக்கும் 2003ம் ஆண்டின் சோகங்களில் ஒன்று.

கோக்-பெப்சி கலாட்டா: நச்சுத் தன்மை கொண்ட பானங்களாக கோக், பெப்சி ஆகியவைஅறிவிக்கப்பட்டபோது இந்தியாவே திடுக்கிட்டது.

உலகத் தரம் வாய்ந்த இந்த இரு உலகளாவிய குளிர்பானங்களும் ஒரே நாளில் மக்களிடையே பெரும் பீதியைஏற்படுத்தின. நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக் கொல்லிகள் இந்த குளிர்பானங்களில் இருப்பதாக டெல்லியைச்சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் குண்டைத் தூக்கிப் போட சாக்கடைகளில் கொட்டப்பட்டன கோக்கும் பெப்சியும்.

நாளடைவில் இந்த பிரச்சினை தேய்ந்து போனது. மறுபடியும் மக்களின் செல்லப் பிள்ளைகளாக மாறிவிட்டனகோக்கும், பெப்சியும்.

என்கெவுண்டர் சாவுகள்: 2003ம் ஆண்டில் தமிழக தலைநகர் சென்னையில் 4 பேரை போலீஸார் என்கெவுண்டர்என்ற பெயரில் குருவியை சுடுவது போல சுட்டுத் தள்ளினர்.

தமிழர் விடுதலைப் படை தலைவர் ராஜாராமன், சரவணன் ஆகிய இருவரும் மார்ச் மாதம் 25ம் தேதி சென்னைகோட்டூர்புரத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜூலை மாதம் 27ம் தேதி அயோத்தி குப்பம் தாதா வீரமணி,மெரீனா கடற்கரையில் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுவெங்கடேஷ் பண்ணையாரின் எண்கெளன்டர் தான்.

பண்ணையாரை சுட்டுக் கொன்றதன் மூலம் நாடார் சமூகத்தின் வெறுப்பையும், எதிர்ப்பையும் தமிழக அரசும்,சென்னை காவல்துறையும் சம்பாதித்துக் கொண்டன. இதனால், சென்னை மாநகர கமிஷ்னர் விஜயக்குமார்வீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டார்.

தா.கிருட்டிணன் படுகொலை: தென் மாவட்ட திமுகவை நிலை குலைய வைக்கும் நிகழ்ச்சியாக முன்னாள்அமைச்சர் தா.கிருட்டிணனின் படுகொலை நடந்தது. மதுரையில் ஓவர் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தகருணாநிதியின் மகன் அழகிரி உள்ளே தள்ளப்பட்டார்.

ராகுல் திராவிட்: இந்த ஆண்டு இந்தியக் கிரிக்கெட்டில் ராகுல் திராவிட்டின் கொடிதான் பறந்தது. உலகக்கோப்பையில் விக்கெட் கீப்பர் பதவியையும் வகித்து, அணிக்கு கூடுதல் பலம் சேர உதவி புரிந்தார். வெல்லவேமுடியாத அணி என்று பெயரெடுத்த ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்த உதவினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X