காவிரியில் நீர் விடக் கோரி பா.ம.க. ஆர்ப்பாட்டம்
திருச்சி:
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு கர்நாடக அரசு உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரிதிருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவிரி டெல்டா பகுதிக்கு திறந்துவிடப்பட்டு வந்த மேட்டூர் அணை நீர் நிறுத்தப்பட்டு விட்டது. இந் நிலையில்பவானி ஆற்று நீரைத் திறந்து விட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இது எந்தளவுக்குப் பயன் தரும்என்று கூற முடியாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணை நின்று போனதால் சம்பா பயிரை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் சோகத்தில்மூழ்கியுள்ளனர். இந் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில்இன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கர்நாடக அரசு காவிரியில்உடனடியாக தண்ணீர் திறந்து விட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டது.



திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!