For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அலங்காநல்லூர் முரட்டுக் காளை ஸ்ரீதர்

By Staff
Google Oneindia Tamil News

அலங்காநல்லூர்

Kamal in Virumandi

ஜல்லிக்கட்டுக்கு அலங்காநல்லூர் தயாராகி வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பல்வேறுஊர்க் காளைகளும், தங்களை அடக்கப் போகும் "காளைகளை" சந்திக்க விறுவிறுப்புடன் தயாராக உள்ளன.

ஆனால் கடந்த ஆண்டுகளில் அலங்காநல்லூர் மாடுகளுக்கு பயத்தை ஏற்படுத்திய ஒரு "முரட்டுக் காளை" இந்தஆண்டு களம் இறங்கப் போவதில்லை. இதனால் ஜல்லிகட்டே களையிழக்கும் என்று அலங்காநல்லூர் வாசிகள்கூறுகிறார்கள்.

அவர்கள் குறிப்பிடும் இளைஞரின் பெயர் ஸ்ரீதர். 17 வயதிலிருந்தே ஜல்லிக்கட்டுக்கு வரும் எல்லா ஊர்மாடுகளையும் அடக்கி ஆண்டு வந்தவர் இந்த வாலிபர். இவரை முரட்டுக் காளை என்றுதான் அப்பகுதி மக்கள்அழைக்கிறார்கள்.

இப்போதுஅவருக்கு வயது 31. சமீபத்தில் திருமணம் நடந்தது. இதையடுத்து இந்த ஆண்டு அவர் ஜல்லிக்கட்டில்அவர் கலந்து கொள்ள அவரது மனைவி தடை போட்டுவிட்டார்.

14 வருடங்களுக்கு முன் ஒரு ஜல்லிக்கட்டைப் பார்த்தபோது, தனது ஊர்க் காளைகளை பிற ஊர் இளைஞர்கள்பிடித்து அடக்கியபோது, அலங்காநல்லூர் வாசிகள் தலையைக் குணிந்தனர்.

இதைப் பார்த்த ஸ்ரீதருக்கு ரோஷம் உச்சத்திற்கு ஏறியது. அடுத்த முறை நாமே களம் இறங்கி பிற ஊர்க் காளைகளைஅடக்கி அலங்காநல்லூரின் வீரத்தை பறை சாற்ற வேண்டும் என்று சபதம் எடுத்தார்.

சபதத்தின்படி அடுத்த ஆண்டு புகுந்து விளையாடினார் ஸ்ரீதர். ஒவ்வொரு காளையும் அவரிடம் கன்றுக் குட்டிபோல பம்மின. அன்று தொடங்கியது ஸ்ரீதரின் வீர விளையாட்டு.

Kamal in Virumandiகும்பலாகப் போய் மாடுகள் மேல் பாய்வதெல்லும் ஸ்ரீதருக்குப் பிடிக்காது. தனியே மாட்டின் மீது ஏறி, அடக்கி,அதன் கழுத்தில் கிடக்கும் துண்டையும் பரிசையும் அத்துக் கொண்டு வருவார். உடல் முழுக்க வீரத் தழும்புகள்கொண்டிருக்கும் இந்த இளைஞரின் வீடு முழுவதும் மாடு பிடித்ததால் கிடைத்த பரிசுகளும், பதக்கங்களும் குவிந்துகிடக்கினறன.

ஸ்ரீதர் களத்தில் இருந்தால் தங்களது காளைகளை உள்ளே அனுப்பவே பிற ஊர்க் காரர்கள் பயப்படுவார்களாம்.அந்த அளவுக்கு ஜல்லிக்கட்டில் தேர்ந்த வீரனாக திகழ்ந்துள்ளார்.

அவரது இந்தப் பெருமை கமலின் காதுகளையும் எட்டியது. விடுவாரா சண்டியர்? கூப்பிட்டார் ஸ்ரீதரை.விருமாண்டியில் வரும் காளையை அடக்கும் காட்சியில் கமலின் டூப்பாக நடித்தது இந்த ஸ்ரீதர்தான்.

படப் பிடிப்பின்போது காளைகளை ஸ்ரீதர் கையாண்ட விதமும், கொஞ்சம் கூட பயமின்றி காளைகளின்கொம்புகளைப் பிடித்து, தரையில் அழுத்தி, அவற்றை நிலை குலையச் செய்த ஸ்ரீதரின் வீரத்தை நேரில் பார்த்துகமல் அசந்துவிட்டாராம்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற அவரது முடிவால் மனைவியும் குடும்பமும்மகிழ்ச்சியில் இருந்தாலும் அலங்காநல்லூர் வாசிகள் முகத்தில் வாட்டத்தை பார்க்க முடிகிறது.

இது குறித்து ஸ்ரீதரிடம் கேட்டபோது, இந்த ஆண்டு மாடு பிடிக்கப் போகாமல் இருப்பது வருத்தம் தான்.இருந்தாலும் எனது குடும்பத்தையும், என்னை நம்பி வந்துள்ள மனைவியையும் நான் அதிகம் நேசிப்பதே எனதுஇந்த முடிவுக்குக் காரணம் என்கிறார்.

எனக்குப் பதில் என் சிஷ்யர்களான அருண், கிட்டு ஆகியோர் களம் இறங்குவார்கள். நான் செய்ய நினைப்பதைஅவர்கள் இனி செய்து காட்டுவார்கள் என்கிறார் இந்த முரட்டுக் காளை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X