திமுகவுக்கு முஸ்லீம் லீக்கின் 3 கோரிக்கைகள்!
சென்னை:
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு 3 கோரிக்கைகளை விடுத்து, அவற்றைஅந்தக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,இஸ்லாமியர்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அயோத்திப் பிரச்சினைக்கு விரைவானதீர்வு, தேசிய பாடல் நூல் கழக புத்தகங்களில் இஸ்லாமிய மதம் தொடர்பாக இடம்பெற்றுள்ள அவதூறானபாடங்களை நீக்குதல் ஆகியவை எங்களது கட்சியின் முக்கிய கோரிக்கைகள் ஆகும்.
இந்த 3 கோரிக்கைகளையும் தங்களது வாக்குறுதிகளாக திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தங்களதுதேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்ய வேண்டும்.
அயோத்திப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இஸ்லாமியர்கள் மதித்து நடப்பார்கள், அதை ஏற்றுக்கொள்வார்கள். தேசிய பாடல் நூல் கழகம் வெளியிட்டுள்ள வரலாற்றுப் பாடநூல்களில் இடம் பெற்றுள்ளபாடங்கள், இஸ்லாமிய சமூகத்தை ஆக்கிரமிப்பு சமூகம் என்பது போன்ற கருத்தை ஏற்படுத்துகிறது. எனவே இந்தப்பாடங்களை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும்.
நாங்கள் எப்போதுமே திமுகவைத்தான் ஆதரித்து வருகிறோம். இடையில் பா.ஜ.க. இடம் பெற்றிருந்த கூட்டணிக்குதிமுக தலைமை வகித்த காரணத்தால்தான் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தோம். தற்போது தேசிய ஜனநாயகக்கூட்டணியிலிருந்து திமுக வெளி வந்து விட்டதால் மீண்டும் எங்களது ஆதரவை திமுகவுக்குத் தெரிவித்துள்ளோம்என்றார் மொய்தீன்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications