மத்தியில் எந்த அரசிலும் சேர மாட்டோம்: வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மக்களவைத் தேர்தலுக்குப் பின் மத்தியில் அமையும் எந்த அரசிலும் மதிமுக சேராது என அக் கட்சியின் பொதுச் செயலாளர்வைகோ கூறியுள்ளார்.

கட்சியின் பொதுக் குழுவை இன்று கூட்டிய வைகோ, கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசியதாவது:

எங்களது திராவிட இயக்கத் தனித்தன்மையை கட்டிக் காத்திடுவது என்று பொதுக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆட்சியில்பங்கெடுத்தால் எங்களது முக்கிய நோக்கமான திராவிட இயக்க வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியாது.

இதனால் மத்தியில் எந்த அரசிலும் சேருவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம். வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்கட்சியின் வேட்பாளர்கள் பட்டியில் 19ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

எங்கள் கூட்டணி வென்றால் சோனியா காந்தியை பிரதமராக ஏற்போம். அவர் வெளிநாட்டுக்காரர் என்ற வாதம் குறித்து முடிவுசெய்ய வேண்டியது மக்கள் தான். கட்சிகள் அல்ல.

பா.ஜ.கவுடன் எங்களுக்கு பல்வேறு கொள்கை வேறுபாடுகள் இருந்த நிலையிலும் அக் கட்சியுடன் கூட்டணி அமைத்தோம்.காங்கிரசுடன் எங்களுக்கு அத்தனை வேறுபாடுகள் கிடையாது. இதனால் காங்கிரசுடன் கூட்டணி என்பது எங்களுக்குபிரச்சனையாக இல்லை.

பொடாவுக்கு ஆதரவாக நான் நாடாளுமன்றத்தில் வாக்களித்தது நான் செய்த மிகப் பெரிய தவறு. பொடாவின் ஒவ்வொருபிரிவையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் நான் எதிர்த்தேன். ஆனால், கூட்டணி தர்மத்துக்காக அதை ஆதரித்துவாக்களித்தேன்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக பொடா சட்டம் நீக்கப்படும். சிறையில் அடைபட்டாலும் என் போராட்டத்தை நான்கைவிடவில்லை. பேச்சுரிமையை எதிர்க்கும் பொடாவின் 21வது பிரிவை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம்சாதகமான பதில் தந்தது.

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல என்று அறிவித்தது. இதை என் அரசியல் வாழ்வில் நான்அடைந்த மிகப் பெரிய சாதனையாகக் கருதுகிறேன்.

தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடும் இயக்கங்களில் முன்னணியில் இருப்பதுவிடுதலைப் புலிகள் தான். இலங்கை மண்ணில் அவர்களை நான் ஆதரிக்கிறேன்.

இலங்கைத் தமிழர்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள் தான் என்பதை உலகமே ஒத்துக் கொண்டுவிட்டது. அமைதிப்பேச்சுவார்த்தையை ஆதரித்து கருத்துத் தெரிவித்த பிரதமர் வாஜ்பாய் கூட இதனை ஒப்புக் கொண்டார். ஒரு நாட்டின் பிரதமரேசொன்னதை, நாட்டின் சாதாரண குடிமகனான நான் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்ததும், ஜனதா விமுக்தி பெரமுனா என்ற இனவாதக் கட்சியுடன் கூட்டணி அமைத்ததும்அதிபர் சந்திரிகா செய்துள்ள மிகப் பெரிய தவறுகள். இதனால் இலங்கையில் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கிறது.

என்னை ஜார்ஜ் பெர்னாண்டஸ் சந்தித்து தனிப்பட்ட முறையில் தான். இதில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றார்.

முன்னதாக வைகோவை மீண்டும் பொதுச் செயலாளராகவும், எல்.கணேசனை மீண்டும் அவைத் தலைவராகவும்மு.கண்ணப்பனை மீண்டும் பொருளாளராகவும் மதிமுக பொதுக் குழு தேர்வு செய்தது.

கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களாக செஞ்சி ராமச்சந்திரன், நாசரேத் துரை, சத்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 7பேர் கொண்ட நாடாளுமன்ற விவகாரக்குழுவும் அமைக்கப்பட்டது.

கட்சியின் தேர்தல் அறிக்கையைத் தயார் செய்ய திருப்பூர் துரைராஜ், டாக்டர் சந்திரசேகரன், வீர.இளவரசன், டாக்டர் சபாபதிமோகன், குலோத்துங்கள் ஆகியோர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் மதிமுகவுக்கு சிவகாசி, வந்தவாசி, திருச்சி, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை 19ம் தேதி வைகோஅறிவிக்கவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+