For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அலட்சியம் காட்டிய போலீஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

ஒசூர்:

Vinthyaநடிகை விந்தியாவைக் கற்பழிக்க முயன்ற பைனான்சியரைக் கைது செய்யாமல், அவரைக் காப்பாற்ற முயன்ற போலீஸ்இன்ஸ்பெக்டரும், சப்-இன்ஸ்பெக்டரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒசூரில் லாட்ஜில் தங்கியிருந்தபோது நள்ளிரவில் தனது அறைக்குள் சிலர் புகுந்து தன்னைக் கற்பழிக்க முயற்சித்தது குறித்துபோலீசாருக்கு விந்தியா தகவல் கொடுத்தார். ஆனால், ஒசூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரும் சப்-இன்ஸ்பெக்டரும் மிகஅசால்டாக நடந்து கொண்டனர்.

புகாரை வாங்க மறுத்ததோடு, லாட்ஜுக்கும் வர மறுத்தனர். இதையடுத்து விஜய்காந்தைத் தொடர்பு கொண்டு விந்தியா புகார் கூறஅவர் டிஜிபி மற்றும் கிருஷ்ணகிரி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் பேசினர்.

இதையடுத்துத் தான் ஒசூர் போலீசார் வழக்கையே பதிவு செய்தனர். ஆனாலும் விசாரணைக்கு வந்த இடத்தில் மிக அலட்சியமாகநடந்து கொண்டனர். கற்பழிக்க முயன்ற கமல்ராஜ் என்று உறுதியான பிறகும் அவனை விட்டுவிட்டு உடன் வந்த இருகைத்தடிகளை மட்டும் கைது செய்தனர்.

ஒசூரின் பெரிய ரெளடிகளில் ஒருவனான கமல்ராஜ், வட்டித் தொழில் செய்து வருகிறான். அத்தோடு சினிமாத்துறையிலும்பணத்தை முதலீடு செய்துள்ளான். அவனிடமிருந்து ஒசூர் போலீசாருக்கு வழக்கமான மாமூலும் போய்விடும் என்பதால் அவனதுரெளடித்தனத்தை போலீசார் கண்டுகொள்வதும் இல்லை.

விந்தியா விஷயத்திலும் போலீசார் அலட்சியம் காட்டியதற்கு கமல்ராஜிடம் அவர்கள் வாங்கிய மாமூலே காரணம் என்றுதெரிகிறது.

கற்பழிக்க முயன்ற கமல்ராஜை தப்ப வைக்க போலீசார் முயல்வதாக செய்தி வெளியானதையடுத்து ஒசூர் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரும் சப் இன்ஸ்பெக்டர் துரைசாமியும் நேற்று இரவோடு இரவாக கிருஷ்ணகிரி ஆயுதப் படைப் பிரிவுக்குஅதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Vinthyaஇதற்கிடையே போலீசாரிடம் கமல்ராஜ் தந்துள்ள வாக்குமூலத்தில், நான் சிவராம் என்ற படத்துக்கு ரூ. 2 லட்சம் பைனான்ஸ்செய்தேன். அதில் என்னை ஹீரோவாகப் போடுவதாக சொல்லி ஏமாற்றிவிட்டார்கள். இந் நிலையில் அந்தப் படத்தின்படப்பிடிப்புக் குழு ஒசூர் வந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை சந்தித்து பணத்தைத் திருப்பி வாங்கவந்தேன்.

விந்தியா தங்கியிருந்த அறையில் சிவராம் படக் குழு தான் தங்கியிருப்பதாக நினைத்து நுழைந்துவிட்டேன். அங்கு விந்தியாஇருப்பது எனக்குத் தெரியவே தெரியாது என்று கூறியுள்ளான்.

இந்த வாக்குமூலமே கூட இன்ஸ்பெக்டரும், சப் இன்ஸ்பெக்டரும் சேர்ந்து ஜோடித்ததாகவே தெரிகிறது. கமல்ராஜை தப்பவைப்பதற்காக இவ்வாறு வாக்குமூலத்தை அவர்கள் பதிவு செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

தனக்கு விந்தியாவின் அறைக் கதவின் கள்ளச்சாவி எப்படி கிடைத்தது என்று அவன் வாக்குமூலத்தில் விளக்கம் ஏதும்சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X