For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவுக்கு முழு ஆதரவு: இந்து முன்னணி

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராகவும், பா.ஜ.க- அதிமுக கூட்டணிக்கு ஆதரவாகவும்பிரச்சாரம் செய்யப்போவதாக இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்து முன்னணி ஒரு அரசியல் கட்சி அல்ல. எந்தத் தேர்தலிலும் அது வேட்பாளரை நிறுத்தாது. இந்துக்களின்நலனையே முக்கிய கடமையாகக் கொண்டு இந்து முன்னணி செயல்படும். அதிமுகவும் இந்துக்களின் நலனில்அக்கறை கொண்டிருப்பதால்தான் அதை நாங்கள் ஆதரிக்கிறோம். பா.ஜ.க-அதிமுக கூட்டணி வெற்றிக்காக இந்துமுன்னணி எந்த நிபந்தனையும் இன்றி பாடுபடும்.

அயோத்திப் பிரச்சனையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. இந்த விவகாரத்தை மடாதிபதிகளும்,ஆதினங்களும் இணைந்து தீர்ப்பார்கள். இந்தத் தேர்தலில் திமுகவின் இந்து விரோதப் போக்கை மக்களிடம்எடுத்துச் செல்வோம். இது தொடர்பான புத்தகத்தை 40 தொகுதிகளிலும் வெளியிடுவோம்.

கோவில்களில் உயிர்வதை தடைச் சட்டம் குறித்து மக்கள் சரியாகப் புரிந்து கொள்ளாததால்தான் அந்தச் சட்டம்திரும்பப் பெறப்பட்டதே தவிர, தேர்தலுக்காகத் திரும்பப் பெறவில்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X