கர்நாடகத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக போட்டி: வேட்பாளர்கள் அறிவிப்பு
டெல்லி:
கர்நாடகத்தில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. பெங்களூரில் 4 தொகுதிகளிலும்,கோலார் தங்கவயல் தொகுதியிலும் அக் கட்சி போட்டியிடுகிறது.
வரும் மக்களவைத் தேர்தலுடன் கர்நாடக சட்டசபைக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் பெங்களூர் சிக்பேட்டை தொகுதியில்கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி போட்டியிடுகிறார்.
கோலார் தங்க வயல் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. பக்தவச்சமும், பெங்களூர் சாம்ராஜ்பேட்டையில் முனுசாமியும், பாரதிநகர் தொகுதியில் சிவசண்முகமும், காந்திநகர் தொகுதியில் சக்கரவர்த்தியும் போட்டியிடுவர் என முதல்வர் ஜெயலலிதா இன்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
இதில் சக்கரவர்த்தி பெங்களூர் மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலராக உள்ளார். கோலார் தங்கவயலில் கடந்த முறை அதிமுகதான் வென்றது. பாரதி நகர் தொகுதியில் அதிமுக பலமுறை வென்றுள்ளது.
அதிமுகவுக்கும் திமுகவுக்கும் பெங்களூர் மாநகராட்சியில் பல கவுன்சிலர்கள் உள்ளனர். ஒரு காலத்தில் பெங்களூர் நகரில் மட்டும்5 எம்.எல்.ஏக்கள் வரை திமுக வென்றுள்ளது. பின்னர் திமுக தேய்ந்து கட்டெறும்பு ஆனது.
அதிமுக மட்டுமே கர்நாடகத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications