திமுகவின் சாதனைகள்: பட்டியலிடுகிறார் கருணாநிதி!
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை சின்னாபின்னாப்படுத்த அதிமுக அரசு முயற்சித்ததை தடுத்ததும், ராணிமேரிக் கல்லூரியை இடித்து தரை மட்டமாக்க முயற்சி செய்ததை தடுத்ததும் திமுகவின் சாதனைகள் என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் அறிக்கை என்ற பெயரில் திமுகவையும், பிறஎதிர்க்கட்சிகளையும் தாறுமாறாக வசை பாடியிருக்கிறது அதிமுக.
பல்வேறு திட்டங்களுக்கு தடங்கல் விளைவித்ததாக திமுக மீது அதிமுக வசை பாடியிருக்கிறது. அவர்களுக்குசாதகத்தையும், மக்களுக்கு பாதகத்தையும் கொடுக்கும் திட்டங்களை திமுக தடுத்ததைத்தான் பாதகம் என்று அதிமுககூறுகிறது போலும்.
ராணி மேரிக் கல்லூரியை இடிக்க நினைத்ததை தடுத்ததும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் தலைமைச்செயலகம் கட்டப் போகிறோம் என்ற பெயரில் சின்னா பின்னாப்படுத்துவதையும் தடுத்ததை திமுகபெருமையாகவே கருதுகிறது.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழக நலன்களுக்கு சாதகமான திட்டங்களை போராடிப்பெறுவதிலிருந்து திமுக தவறியதே இல்லை.
சேலம் உருக்காலைத் திட்டத்தை இந்திரா காந்தியிடம் போராடிப் பெற்றது திமுக அரசுதான். காவிரி நீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு காண நடுவர் மன்றத்தையும், காவிரி கண்காணிப்புக் குழுவையும் அமைக்க முயற்சி செய்துவெற்றி கண்டதும் திமுக அரசுதான்.
வி.பி.சிங்கிடம் வலியுறுத்தி மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த வைத்ததும் திமுக அரசுதான் என்பதைமக்கள் உணர்வார்கள். இதை திமுகவின் சாதனைகளாவே கருதுகிறோம் என்று கூறியுள்ளார் அவர்.
-
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications