பா.ஜ.க: லலிதாவுக்கு செக் வைக்கும் திருநாவுக்கரசர்
சென்னை:
பா.ஜ.கவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படுகிறது. இத்தகவலை அக் கட்சியின் தலைவர் வெங்கையா நாயுடு ஜெய்ப்பூரில் தெரிவித்தார்.
இதில் தமிழக பா.ஜ.க. வேட்பாளர்கள் சிலரின் பெயர்களும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணிக்கட்சிகள் போட்டியிடுகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை கோவையில் அக் கட்சியின் தலைவர் ராதாகிருஷ்ணன் தான் போட்டியிடுவார் என துணைப்பிரதமர் அத்வானி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அத்வானியின் ரத யாத்திரை நடந்தபோது சில பா.ஜ.கவினர் கோவைநகர வேட்பாளர் இல.கணேசனுக்கு வாக்களியுங்கள் என்று பிட் நோட்டீஸ் வினியோகித்தனர்.
இதன்மூலம் கட்சியில் நிலவி வரும் கோஷ்டிப் பூசல் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. இந் நிலையில் கோவை வேட்பாளர் யார்என்று அத்வானியிடம் நிருபர்கள் கேட்டபோது, ராதாகிருஷ்ணன் தான் வேட்பாளர், அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்என்றார்.
இதனால் அவர் போட்டியிடுவதும் அதே போல நீலகிரி வேட்பாளராக மாஸ்டர் மாதனும், நாகர்கோவில் வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதும் உறுதியாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் பட்டியலில் இந்த மூன்று தொகுதிகளின்வேட்பாளர்களையும் பா.ஜ.க. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் தர்மபுரி, வட சென்னை குழப்பம் தீரவில்லை. தர்மபுரியை வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம சுகந்தன்எதிர்பார்க்கிறார். இதற்காகத் தான் பா.ஜ.கவிலேயே அவர் சேர்ந்தார். ஆனால், புதிதாய் வந்தவருக்கு சீட்டா என இல.கணேசன்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
அதே போல வட சென்னைக்கும் சரியான வேட்பாளர் இல்லாமல் பா.ஜ.க. திணறுகிறது. மற்றபடி சிதம்பரத்தில் முன்னாள் தலைவர்கிருபாநிதியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரியில் தேர்தல் பொறுப்பாளராக திருநாவுக்கரசரை கட்சி மேலிடம் நியமித்துள்ளது. அங்கு முதல்கட்ட ஆய்வு நடத்தியதிருநாவுக்கரசர், ஒரு வன்னிய இன வேட்பாளரை நிறுத்துவது நல்லது என கட்சித் தலைமைக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
இதனால் அந்தத் தொகுதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் லலிதா குமாரமங்கலத்துக்கும் திருநாவுக்கரசருக்கும் இடையேபுகைச்சல் கிளம்பியுள்ளது. லலிதா குமாரமங்கலம் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர் என்று கருதும் திருநாவுக்கரசர்அவருக்கு சீட் இல்லாமல் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications