For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூங்கும்போதும் நாட்டையே நினைக்கிறேன்: ஜெ

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

தூங்கும்போதும் கூட நாட்டை பற்றித்தான் நினைக்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

ஜெயலலிதா தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவினாசி மற்றும் இருகூரில்நடந்த அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் மாஸ்டர் மாதன், கோவைதொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

நீங்கள் எனக்கு பெரும் ஆதரவு அளித்து என்னை முதல்வர் ஆக்கியுள்ளீர்கள். அப்போது உங்களுக்குக் கொடுத்தவாக்குறுதிகளை எல்லாம் நான் நிறைவேற்றி வருகிறேன். தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாகஆக்குவதற்கான முயற்சியில் அயராது பாடுபட்டு வருகிறேன்.

தேர்தல் நேரத்தில் மட்டும் நான் உங்களை சந்திக்க வரவிலலை. மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் செய்துஇதுவரை 32 அரசு விழாக்களை நடத்தி உள்ளேன். ரூ.9,694 கோடி செலவில் பல்வேறு நலப் பணிகள் செய்துமுடிக்கப்பட்டுள்ளன. ரூ.326 கோடி செலவில் 5.31 லட்சம் பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்த கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துள்ளன. இவர்கள் உலக தமிழர்களுக்கும்குரல் கொடுக்கவில்லை. உள்ளூர் தமிழர்களுக்கும் குரல் கொடுக்க வில்லை.

அயல்நாட்டில் பிறந்தவர்கள் இந்தியாவில் உயர் பதவி வகிக்க கூடாது என்ற ஒரு தேசிய ஜனநாயகக்கூட்டணியின் செயல் திட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கையெழுத்திட்டு உள்ளார். ஆனால் இப்போதுவெளிநாட்டுக்காரர் பிரதமர் பதவி வகிக்க ஆதரவு கொடுக்கிறார். இதுபற்றி கேட்டால் நான் அப்படி எந்தகையெழுத்தையும் போடவே இல்லை என சத்தியம் செய்கிறார்.

நேரத்துக்கு நேரம் அளவுகோலை மாற்றிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகளும் அந்த கூட்டணியில் உள்ளனர்.இவர்களுக்கெல்லாம் எந்த வித நல்ல எண்ணமும் கிடையாது. இவர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு இல்லாதஊருக்கு வழியை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிற குருடர்களால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது.இத்தேர்தல் மூலம் இவர்களுக்கு மறக்க முடியாத பாடம் கற்றுக்கொடுங்கள்.

நான் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உங்களுக்காக உழைக்கிறேன். தூங்குகிறபோதுகூட இந்த நாட்டை முதல்நிலைக்கு கொண்டு செல்வது எப்படி என்ற சிந்தனைதான் என்னுள் எழுகிறது. எனவே, எங்கள் அணிக்கு மாபெரும்வெற்றியை தேடித் தாருங்கள் என்றார்.

இதுதவிர பதிபக்தி, தேசபக்தியில்லாத சோனியா, ஜாதிவெறியர் ராமதாஸ், வாய்ச் சவடால் வைகோ, காவிரிவிஷயத்தில் துரோகம் இழைத்த கருணாநிதி உள்ளிட்ட வழக்கமான ஓட்டை ரெக்கார்டு பேச்சும் அவரது உரையில்இடம் பெற்றிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X