For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜிவ் கொலை: என்னுடன் விவாதத்துக்கு ஜெ. தயாரா?- கருணாநிதி சவால்!

By Staff
Google Oneindia Tamil News

திருவண்ணாமலை:

ராஜீவ் காந்தி கொலைக்கு திமுகதான் காரணம் என்று பொய் பேசிக் கொண்டு திரியும் ஜெயலலிதா,அதுதொடர்பாக என்னுடன் ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதம் நடத்தத் தயாரா என்று திமுக தலைவர்கருணாநிதி சவால் விடுத்தார்.

திருவண்ணாமலையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் தண்ணீர்ப்பஞ்சம். நகர்ப் பகுதிகளில் விலை கொடுத்தால் தான் தண்ணீரை பார்க்க முடிகிறது. கிராமப் பகுதிகளில்தண்ணீருக்காக மக்கள் பல மைல் தூரம் நடக்கின்றனர். தண்ணீர் தர முடியாத சர்க்காருக்கு இங்கு என்ன வேலை?

வறுமை, வறட்சி காரணமாக மக்கள் எலிக்கறி சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். வறட்சி நிவாரணம்என்ற பெயரில் தனது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கியுள்ளது இந்த ஆட்சி. இதைமனதில் வைத்து விவசாயிகள் வாக்களிக்க வேண்டும்.

இந்த அம்மையாருடன் கூட்டணி சேர்ந்துள்ள பா.ஜ.கவினர் இந்தியா ஒளிர்வதாய் சொல்கிறார்கள். எங்கேஒளிர்கிறது? அதை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.

மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையும் கூட்டி அந்தபெரும்பான்மை மூலம் பொடா சட்டத்தை நிறைவேற்றியது பா.ஜ.க. ஆனால், அதேபோல, மகளிர் இட ஒதுக்கீடுமசோதாவையும் நிறைவேற்றி இருக்க வேண்டியது தானே. இந்தக் கேள்விக்கு சவால் மன்னர்களானபா.ஜ.கவினரின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையை சுட்டிக் காட்டி ஜெயலலிதா அடிக்கடி ராஜீவ் கொலை வழக்கில்திமுகவை குற்றம் சாட்டி வருகிறார்.கடந்த 1998ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி கமிஷனின் தலைவர் நீதிபதி ஜெயின்அளித்த ஒரு பேட்டியில், ராஜீவ் கொலையில் கருணாநிதி மீது நான் சந்தேகம் தெரிவிக்கவில்லை என்றுதெளிவாகக் கூறியுள்ளார்.

அதேபோல, முன்னாள் சிபிஐ இயக்குனர் விஜய் கரன் எழுதியுள்ள புத்தகத்தில், ராஜீவ் கொலை வழக்குதொடர்பாக நான் (கருணாநிதி) கைது செய்யப்படுவேனா என்று மிகவும் ஆர்வடன் ஜெயலலிதா கேட்டுள்ளார்.

அதற்கு விஜய் கரன், இல்லை, கருணாநிதி மீது வழக்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். இதை புத்தகத்தில்குறிப்பிட்டுள்ளார் கரன்.

இதிலிருந்தே, திமுகவையும், என்னையும் பழி வாங்கவே இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு போகும்இடங்களிலெல்லாம் புலம்பி வருகிறார் ஜெயலலிதா என்பது புரியும். இதுதொடர்பாக என்னுடன் ஒரே மேடையில்நேருக்கு நேராக பொது விவாதம் நடத்த ஜெயலலிதா தயாரா என்று கேட்கிறேன் என்றார் கருணாநிதி.

பின்னர் பர்கூர் வழியாக கிருஷ்ணகிரிக்குச் சென்றார் கருணாநிதி. அங்கும் பொதுக் கூட்டத்தில் பேசினார்.திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி பொதுக் கூட்டங்களில் ஏராளமான மக்கள் திரண்டிருந்ததனர். அதேபோல அவர் சென்ற வழியெங்கும் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X