For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜீவஜோதி வழக்கு: ராஜகோபாலிடம் பணம் வாங்கவில்லை- தடயவியல் நிபுணர் மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆதரவாக ரூ. 10 லட்சம் பணம் வாங்கியதாகக் கூறப்பட்டதைதிட்டவட்டமாக மறுத்துள்ளார் பிரபல தடயவியல் நிபுணர் டாக்டர் சந்திரசேகர்.

சென்னைப் பல்கலைக்கழக தடயவியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் டாக்டர் சந்திரசேகர்.இந்தியாவிலேயே பிரபலமான தடயவியல் நிபுணர். ராஜீவ் காந்தி கொலை வழக்கு, ஆட்டோ சங்கர் வழக்குஉள்ளிட்டவற்றில் மிகவும் துல்லியமாக தடயங்களை புலனறிந்து புகழ் பெற்றவர்.

இந் நிலையில், சரவண பவன் அதிபர் ராஜகோபால் மீதான கொலை வழக்கில் அவருக்கு சாதகமாக சந்திரசேகர்சாட்சியம் அளித்திருந்தார். அவரிடம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வீரராகவன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

அப்போது ராஜகோபாலுக்கு ஆதரவாக சாட்சி சொல்வதற்கு ரூ. 10 லட்சம் வாங்கினீர்கள் என்று வழக்கறிஞர்வீரராகவன் குற்றம் சாட்டினார். அதை சந்திரசேகர் திட்டவட்டமாக மறுத்தார். இது போன்ற குற்றச்சாட்டுக்கள என்மீது அவதூறை ஏற்படுத்தும் நோக்கத்தில் கூறப்படுவதாக அவர் கடுமையாக தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் எத்தனை மண்டை ஓடுகளைப் பாதுகாத்துவைத்துள்ளார்கள் என்பது குறித்து எனக்குத் தெரியாது. இருப்பினும், 2003ம் ஆண்டு வரை 1,198 மண்டைஓடுகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளன. எனது சொந்த விருப்பத்தின் பேரில் 600 மண்டை ஓடுகளை நான்பரிசோதித்துள்ளேன்.

ஆட்டோ சங்கர் வழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட 3 மண்டை ஓடுகளை நான் பரிசோதித்துப் பார்த்து அறிக்கைகொடுத்தேன். ஆனால் அந்த அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. இதேபோன்றஆய்வுதான் பிரேமானந்தா வழக்கிலும் மேற்கொள்ளப்பட்டது.

எனவே தற்போது ராஜகோபால் வழக்கிலும் டாக்டர் ஜெயப்பிரகாஷ் மேற்கொண்டுள்ள தடயவியல் அறிக்கையைஏற்க முடியாது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X