For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலம்: இவர்கள் ரசிகர்களா இல்லையா?

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

நாாடாளுமன்றத் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக--பா.ஜ.க. கூட்டணியை ஆதரிப்பதாகரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா அறிவித்ததற்கு சேலத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.

மேலும், ரசிகர் மன்றத்தில் இருந்து விலகி உறுப்பினர் அட்டைகளையும் தீ வைத்து எரித்தனர்.

சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் எக்ஸ்டென்ஸன்களில் உள்ள பாட்ஷா ரஜினி ரசிகர் மன்ற தலைவர்வெங்கடேஷ், பொருளாளர் மணி, செயலா ளர் ரஜினி ரவி ஆகியோர் தங்கள் பொறுப்புகளில் இருந்தும், மன்றஉறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்தனர்.

அவர்கள் 50-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள கோட்டைமைதானம் வந்தனர். இவர்களுடன் மகுடஞ்சாவடியில் இருந்து வந்த ரஜினி ரசிகர்களும் கலந்துகொண்டனர்.

அங்கு ரஜினி மன்ற உறுப்பினர் அட்டை களை கிழித்து தீ வைத்து எரித்தனர். ரஜினி படமும் எரிக்கப்பட்டது. ரஜினிமன்ற போர்டையும் கொண்டு வந்து அதில் இருந்த ரஜினிகாந்த் படத்தை பெயிண்ட்டால் அழித்தனர்.

பின்னர் வெங்கடேஷ் கூறியதாவது:

1996-ல் நடந்த தேர்தலில் அதிமுகவை எதிர்த்து குரல் கொடுத்த ரஜினி தற்போது திடீரென்று அதிமுகக்கு ஆதரவுதெரிவித்து இருப்பது எங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் சத்தியநாராயணா தான். இவர் ரசிகர்களின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளாமல்அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் உறுப்பினர் அட்டை களைஎரித்துவிட்டோம்.

மணி, ரஜினிரவி ஆகியோர் கூறுகையில் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கொடுத்தது தமிழ்நாடு. ஆனால் அவர்காவிரி பிரச்சினைக்காக திரையுலகினருடன் சேர்ந்து போராடாமல் தனிப்பட்ட முறையில் உண்ணா விரதம் இருந்துபிளவு ஏற்படுத்தினார்.

அதேபோல் இப்போதும் தனது முடிவை திடீரென்று மாற்றிக்கொண்டு அதிமுக கூட்டணிக்கு ஆதரவுதெரிவித்துள்ளார். இவர் எது சொன்னாலும் கேட்க நாங்கள் முட்டாள்கள் அல்ல என்றனர்.

இந் நிலையில் சேலம்- நாமக்கல் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சக்திவேல் இந்தச் சம்பவம்செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இது ரஜினி ரசிகர்கள் போல் பாமகவினர் செய்த வேலையாகும். சேலம் தம்மண்ண செட்டித் தெருவில் உள்ளபழைய பொருள் விற்கும் கடையில் ஒரு பழைய போர்டை வாங்கி, அதை ரஜினி ரசிகர் மன்ற போர்டு போல் மாற்றிஇந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

அவர்கள் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளோம். தக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் விபரீதநடவடிக்கைகள் ஏற்படும் என்றார். பின்னர் ரஜினி ரசிகர்கள் பேரில் போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்யவேண்டும் என்று சொல்லி சேலம் மேம்பாலத்தில் சிலர் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த இரு சம்பவங்களால் சேலத்தில் பெரும் பரபரப்புஏற்பட்டது.

இச் சம்பவம் நடந்தபோது சத்தியநாராயணா சேலத்தில்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X