For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனைத்து கட்சி தலைவர்களுடன் சாரங்கி ஆலோசனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுடன் தேர்தல் தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கி இன்றுஆலோசனை நடத்தினார்.

இன்று காலை தலைமைச் செயலகத்தில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.சிறப்புப் பார்வையாளர் பாசு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

திமுக சார்பில் விடுதலை விரும்பி, இளங்கோவன், அதிமுக சார்பில் பொன்னையன், ஜெயக்குமார், காங்கிரஸ்சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஞானதேசிகன், பாமக சார்பில் ஜி.கே.மணி, பா.ஜ.க. சார்பில் குமாரவேலு,கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தியாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்ராமகிருஷ்ணன்,

மதிமுக சார்பில் சபாபதி முருகன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இசக்கிமுத்து, இந்திய யூனியன்முஸ்லீம் லீக் சார்பில் அப்துல் வகாப் உள்பட 44 பேர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சாராங்கி,

வாக்களிப்பதற்கு கூடுதலாக 1 மணி நேரம் அதிகரிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி காலை 7மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டு போடலாம். வேட்பாளரின் தேர்தல் செலவு தொகையை ரூ.15லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் பின்னால் 3 வாகனங்களுக்கு மேல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்தக் கட்டுப்பாடு முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பொருந்தும்.

மதுரையில் ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் அனுப்பிய அறிக்கை உள்துறைக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்துக்குப் பின்னர் சாரங்கியிடம் ஒரு புகார் மனுஅளித்தனர். அதில், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஜெயலலிதா கலந்து கொள்ளும் பிரசாரத்தில்வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு அதிமுக இரட்டை இலை சின்னம் பிரிண்ட்செய்யப்பட்ட பச்சை சேலைகள் வழங்கப்படுகின்றனர்.

இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும். எனவே தேர்தல் முடியும்வரை மகளிர் சுய உதவிக் குழுகூட்டங்களை நடத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும்.

நாகர்கோவில் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மின் ஒரு கொலை வழக்கில்சம்பந்தமுடையவர் என்று ஒரு அமைச்சர் தவறான தகவலைப் பரப்பி வருகிறார்.

ஜெயலலிதா தனது பிரசாரங்களில் தொடர்ந்து தனி நபர் விமர்சனங்களை அநாகரிகமான சொற்களால் செய்துவருகிறார். எனவே தேர்தல் விதிகளை மீறியதற்காக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு தேர்தல்ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X