ரஜினியை புகழ்ந்த நடிகர் தாமுவை மேடையை விட்டு இறக்கிய அதிமுகவினர்
சென்னை:
நடிகர் ரஜினியைப் புகழ்ந்து அதிமுக பிரசாரக் கூட்டத்தில் பேசிய நடிகர் தாமு மேடையில் இருந்துபாதியிலேயே இறக்கிவிடப்பட்டார். அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் தாமு, பல வருடங்களாக அதிமுக பேச்சாளராகவும் இருந்துவருகிறார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் அவர் அதிமுகவுக்காகப் பிரசாரம் செய்துவருகிறார்.
வட சென்னைப் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது,கர்நாடகத்தைச் சேர்ந்தவரான ரஜினிகாந்த் கூட காவிரிப் பிரச்சினைக்காக குரல் கொடுத்தார், உண்ணாவிரதம்இருந்தார். ஆனால் கருணாநிதி என்ன செய்தார் என்று கேட்டார்.
இதைக் கேட்டதும் மேடையில் இருந்த அதிமுக பிரமுகர்கள் கோபமடைந்தனர். தங்களை மேடையில் வைத்துக்கொண்டு ரஜினியை தாமு புகழந்தது தெரியவந்தால் தங்களையும் அம்மா கட்டம் கட்டிவிடுவார் என்ற பயத்தில்உறைந்தனர்
மேடையில் இருந்த வட சென்னை அதிமுக மாவட்டச் செயலாளர் சேகர் பாபு, தாமுயை நோக்கி ஓடினார்.ரஜினியைப் பற்றி நமது மேடையில் பேச வேண்டாம். உடனே பேச்சை நிறுத்திவிட்டு மேடையை விட்டுஇறங்குங்கள்.
ரஜினி விஷயத்தில் அம்மாவின் நிலைப்பாடும், கட்சியின் நிலைப்பாடு உங்களுக்குத் தெரியாதா என்றுகோபத்துடன் திட்டித் தீர்த்தார். இது அப்படியே மைக் மூலமாக ஒலிப்பெருக்கிகளும் கேட்டது. ரஜினியை புகழ்ந்துபேசியதால் மேடையில் வைத்து திட்டு வாங்கிய தாமு, கூனிக் குறுகியபடி பேச்சை நிறுத்திக் கொண்டு மேடைக்குப்பின்புறமாக போய் நின்று கொண்டார்.
ரஜினி குறித்து தாமு பேசிய விவரத்தையும் உடனடியாக ஜெயலலிதாவுக்கு புகார்களாக தட்டி விட்டுள்ளர்அதிமுகவினர்.
இதனால் விரைவில் தாமு டமால் ஆகலாம் என்கிறார்கள் அதிமுகவினர். ரொம்ப சீக்கிரமே நமது எம்.ஜி.ஆரில்தாமு குறித்த நியூஸ் கட்டம் கட்டப்பட்டு பாக்ஸ் மேட்டராக வெளியாகும் என்கின்றனர்.
அதே போல மதுரையில் உண்ணாவிரதம் இருந்த ரஜினி ரசிகர்களைச் சந்திக்கக் கிளம்பிய அதிமுக வேட்பாளர்போசுக்கு சென்னையில் இருந்து செல்போனில், அங்கு போக வேண்டாம் என்று எச்சரிக்கை வந்ததால், வண்டியைபாதியிலேயே திருப்பிக் கொண்டு போய்விட்டார்.
வருவதாக சொன்ன போஸை எதிர்பார்த்துக் காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.
ரஜினி எதிர்த்தபோதும் அதிமுகவினர் பயப்பட்டார்கள். இப்போது தானாக முன் வந்து ஆதரவு கொடுத்தாலும் ஏற்கமறுத்து ரஜினிக்கு நோஸ் கட் கொடுத்துக் கொண்டிருக்கிறது அதிமுக.
ரஜினியின் நிலை இப்படியா ஆக வேண்டும்? எப்படி இருந்த ரஜினி இப்படி ஆயிட்டாரு!
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications