For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது ஆணடவன் அளித்த தீர்ப்பு: ரஜினி சொல்கிறார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பா.ம.க. உள்பட திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வென்றது, ஆண்டவன் அளித்த தீர்ப்பு என நடிகர் ரஜினிகூறியுள்ளார்.

தனது ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயண ராவ் மூலமாக ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக கூட்டணிக்கு ரஜினி சார்பாகவும், மன்றங்கள் சார்பிலும்நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பார்ந்த ரசிகர்களே, பாமகவை பொறுத்தவரை நம் அன்புத் தலைவர் ரஜினி ஏற்கனவ கூறியது போல,அவர்கள் ஜெயித்தால் நாம் தோற்றுவிட்டோம் என்று அர்த்தம் அல்ல. இது ஆண்டவன் அளித்த தீர்ப்பு.

பா.ம.க போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் கடுமையாக உழைத்த அன்பு ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியைதெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பு ரசிகர்கள், இனி வழக்கம்போல் உங்கள் அன்றாட வேலைகளிலும் குடும்ப நலன் காப்பதிலும் காப்பதிலும்,உங்கள் கவனத்தை செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரஜினி பலூன் புஸ்: கி.வீரமணி

தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்குக் கிடைத்துள்ள மகத்தான வெற்றி, கருணாநிதியின் ராஜதந்திர வியூகத்துக்குகிடைத்த வெற்றி என திக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியார், அண்ணாவின் பூமியில் காவிக்கறை துடைக்கப்பட்டுவிட்டது. மண்ணின்மானம் காக்கப்பட்டுவிட்டது. மீடியாவால் பெரிதாக ஊதப்பட்ட நடிகர் ஒருவரின் (ரஜினி) நிலை, காற்று போன பலூன் மாதிரி புஸ்என்று ஆகிவிட்டது.

இந்த சாதனையைச் செய்த தமிழக வாக்காளர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று கூறியுளளார் வீரமணி.

கருணாநிதியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு:

அதிமுக-பா.ஜ.க. கூட்டணியின் தோல்விக்கு முதல்வர் ஜெயலலிதா தான் காரணம் என நேரடியாகக் குற்றம் சாட்டிய பா.ஜ.க. தலைவர் திருநாவுக்கரசர்பின்னர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

பேட்டி அளிப்பதற்காக, அண்ணா அறிவாலய மாடியில் உள்ள சன் டிவி அலுவலகத்துக்கு வந்த திருநாவுக்கரசர், அப்படியே கருணாநிதியை சந்திக்க வந்தார்.

அப்போது கருணாநிதி வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். திருநாவுக்கரசரை பார்த்தவுடன் அவரை அழைத்து கைகுலுக்கினார். அப்போது திமுகவின்வெற்றிக்கு திருநாவுக்கரசர் வாழ்த்துத் தெரிவித்தார்.

இருவரும் தனியே சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தற். பின்னர் கருணாநிதி அடித்த ஜோக்குக்கு வெடிச் சிரிப்பை பதிலாகத் தந்துவிட்டு அஙகிருந்து கிளம்பினார்திருநாவுக்கரசர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X