பாதுகாப்பு ஆலோசகராக தீக்ஷித்: வருந்தவில்லை - வைகோ
சென்னை:
பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக ஜே.என். தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளது தனக்கு மன வருத்தம்எதையும் தரவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ராஜிவ் பிரதமராக இருந்தபோது வெளியுறவுத்துறைச் செயலாளராக இருந்த தீக்ஷித் தான்இலங்கைக்கு அமைதி காக்கும் படையை அனுப்பச் செய்தார் என்பது நினைவுகூறத்தக்கது.
இலங்கை விவகாரத்தில் ராஜிவை இவர் தவறாக வழிகாட்டியதாக தமிழ் தேசிய இயக்கத் தலைவர்பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்கள் புகார் கூறியதுண்டு.
இந் நிலையில் இவர் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கட்டுள்ளதால் வைகோ அதிருப்திஅடைந்துள்ளதாக செய்திகள் வெளியாயின.
இதை மறுத்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் தமிழர்கள் கெளரவத்துடனும், அமைதியாகவும் வாழும் வகையில், அங்குஅமைதியை ஏற்படுத்த நார்வே உதவியுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின்பங்களிப்பும் இருக்க வேண்டும்.
இதை பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் பாதுகாப்பு அமைச்சர் பிரனாப் முகர்ஜியிடமும் நேரில்சந்தித்து வலியுறுத்தினேன். மனுவும் கொடுத்தேன்.
இந் நிலையில் ஜே.என். தீக்ஷித் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் எனக்கு மன வருத்தம்ஏதுமில்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். எதிர்காலத்தை நம்பிக்கையுடன்எதிர்கொள்வோம்.இலங்கையில் தமிழர்களுக்கு புதுவாழ்வு மலர உதவுவோம்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கவும், சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக அமலாக்கவும்பொது செயல் திட்டத்தில் மத்திய அரசு உறுதிமொழி அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறதுஎன்று கூறியுள்ளார் வைகோ.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications