ஜூலை 26ல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
இந்த ஆண்டின் அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூலை 26ம் தேதி தொடங்கவுள்ளது.
தென் இமாலயத்தின் அமர்நாத்தில் உள்ள குகைக் கோவிலுக்குச் செல்ல ஆண்டுதோறும் புனித யாத்திரை நடக்கிறது. பனியால் உருவாகும் சிவலிங்கத்தை தரிசிக்க இந்த யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
இமாலயத்தின் 3,880 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த அமர்நாத் குகை.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பலத்த ராணுவ பாதுகாப்புடன் இந்த யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜூலை 26ம் தேதி பகல்காம் அருகே உள்ள நுன்வான், ஸ்ரீநகர் அருகே உள்ள பல்தல் ஆகிய பேஸ் கேம்ப்களில் இருந்து யாத்திரை தொடங்கும் என காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.
இந்த யாத்திரை ரக்ஷா பந்தன் தினத்தன்று முடிவடையும்.












Click it and Unblock the Notifications