விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.
விம்பிள்டன் போட்டிகள் 15 தினங்கள் நடைபெறும். இந்த முறை காயம் காரணமாக முன்னணி வீரர்கள் பலர் போட்டியிலிருந்து விலகியுள்ளதால் சுவாரசியம் சற்றுக் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னணி வீரர்களான ஆந்த்ரே அகாஸி, கஸ்தவோ குயர்தன், காஸ்டன் காடியோ ஆகியோர் போட்டியில் பங்கேற்கவில்லை. இதனால் ரோஜர் ஃபெடரர், ஆன்டி ராடிக் ஆகியோருக்கே பட்டம் வெல்லும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.
அதேபோல் மகளிர் பிரிவில் ஜஸ்டின் ஹெனின், கிம் கிளிஸ்டர்ஸ் ஆகியோர் இல்லாததால், அமெரிக்க சகோதரிகள் வீனஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் இறுதிப் போட்டியில் மோதுவார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications