விஜயகாந்த்-- ரஜினி ரசிகர்கள் கைகோர்ப்பு
பண்ருட்டி:
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற தத்துவத்தின் அடிப்படையில், பாமக எதிர்ப்பு விவகாரத்தில் விஜயகாந்த்ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர்.
பாமகவினரின் கடும் எதிர்ப்பையும், தாக்குதல்களையும் சந்தித்து அனுபவப்பட்டவர்கள் ரஜினி ரசிகர்கள்.இப்போது விஜயகாந்த்துக்கு எதிராக பாமகவினர் திரும்பியுள்ளதால் விஜயகாந்த் ரசிகர்களுக்கு ஆதரவாக ரஜினிரசிகர்கள் செயல்பட முடிவெடுத்துள்ளனர்.
வன்னியர்கள் அதிகம் உள்ள பண்ருட்டி பகுதியில், விஜயகாந்த் ரசிர்களுக்கு பாமகவினர் கடும் மிரட்டல் கொடுத்துவந்தனர். இந்தச் சூழ்நிலையில், பாமகவினரின் கடும் எதிர்ப்பை சமாளிக்க ரஜினி ரசிகர்களை நாடுவது என முடிவுசெய்தனர் விஜயகாந்த் ரசிகர்கள். இதைத் தொடர்ந்து மேல்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த் ரசிகர்கள்,அப்பகுதியைச் சேர்ந்த ரஜினி ரசிகர்களை அணுகி ஆதரவு கோரினர்.
ரஜினி ரசிகர்களும் உடனடியாக ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மேல்மாம்பட்டு கிராமத்தில்விஜயகாந்த்தின் அடுத்த படமான கஜேந்திரா பட பேனர் கட்டப்பட்டது. அதில் ஒரு புறம் விஜயகாந்த்தும், மறுபுறம்ரஜினியும் இடம் பெற்றுள்ளனர். மேலும், வருங்கால முதல்வர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கஜேந்திராவெற்றி பெற வாழ்த்தும் நெஞ்சங்கள் என விஜயகாந்த் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் இணைந்துவாழ்த்தியுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications