விஜயகாந்த் ரசிகர்களுடன் சமாதானம்: பாமக
சென்னை:
நடிகர் விஜயகாந்த் ரசிகர்களுடன் எந்தவித மோதலிலும் ஈடுபட வேண்டாம் என பாமக தலைவர் ஜி.கே.மணிகட்சித் தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர் குறித்து விஜயகாந்த் கருத்துத்தெரிவிக்கப் போக அது பாமக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
வட மாவட்டங்களைச் சேர்ந்த பாமக தொண்டர்கள் ஆங்காங்கே விஜயகாந்த் உருவ பொம்மை எரிப்பிலும், மன்றபோர்டுகளை உடைப்பதிலும், ரசிகர்களைத் தாக்குவதிலும் ஈடுபட்டனர். அவர்களுக்கு விஜயகாந்த் ரசிகர்களும்சரியான பதிலடி தந்தனர்.
அதேசமயம், விஜயகாந்த், தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று ராமதாஸிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டால்தான்விடுவோம், இல்லாவிட்டால் அவரது ஒரு படத்தையும் தியேட்டரில் வெளியிட விட மாட்டோம் என்று பாமகவைச்சேர்ந்த முக்கிய தலைவர்கள் முழங்கி வந்தனர். இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளின் கூட்டத்தை வருகிற ஜூலை 1ம் தேதி சென்னையில் கூட்டியுள்ளார் விஜயகாந்த்.
இந்தச் சூழ்நிலையில் பாமக திடீரென தனது போராட்டத்திலிருந்து பின்வாங்கியுள்ளது.
அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட ஒரு அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பான கட்சி.பல்வேறு மக்கள் நல விரோதப் பிரச்சினைகளான மதுக் கடை எதிர்ப்பு, கல்விக் கட்டண உயர்வு, குடிநீர்ப்பற்றாக்குறை பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்த்துப் போராட வேண்டிய நிலையில் பாமக உள்ளது.
எனவே பாமக தொண்டர்கள் விஜயகாந்த் ரசிகர்களுக்கு எதிரான போராட்டத்தைக் கைவிட்டுவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். விஜயகாந்த்தின் பேச்சு தேவையில்லாத ஒன்று, மிகவும் கடுமையானது. இதுதொடர்பாக கோபம்கொண்டுள்ள பாமக தொண்டர்களின் உணர்வுகளை கட்சித் தலைமை மதிக்கிறது.
இருப்பினும், இந்த சவாலை அரசியல் ரீதியாக சந்திப்போம். எனவே தொடர்ந்து எந்தவிதத்திலும் போராட்டத்தில்ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார் ஜி.கே.மணி.
விஜயகாந்த் ரசிகர்களுடான மோதலில் திடீரென பாமக இறங்கி வந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சயத்தைஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களும் சமாதானம்:
ஜி.கே.மணியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, விஜய்காந்த் ரசிகர்கள் யாரும் பாமகவினருக்கு எதிரானசெயல்களில் ஈடுபட வேண்டாம் என்று விஜயகாந்த் மாநில ரசிகர் மன்ற செயலாளர் ராமு வசந்தன் தெரிவித்துள்ளார்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications