For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூர் சாப்ட்வேர்: சென்னை வீசும் வலை

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

- ஏ.கே. கான்

அடிப்படை வசதிகளுக்குத் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல், இடவசதியின்மை, மிக அதிகமான கட்டட வாடகை உள்ளிட்ட பலகாரணங்களால் எரிச்சலடைந்துள்ள பெங்களூரின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு தமிழகம் வலைவீசி வருகிறது.

விப்ரோ நிறுவன அதிபர் ஆஸிம் பிரேம்ஜியை, தமிழக தகவல் தொடர்புத்துறைச் செயலாளர் விவேக் ஹரிநாராயணன் இன்று நேரில்சந்தித்து தமிழகத்தில் தனது நிறுவனத்தை விரிவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இன்போஸிசின் வருத்தம்:

இன்போசிஸ் நிறுவனம் ரூ. 1,000 கோடி செலவில் தனக்கென தனி சாப்ட்வேர் பார்க்கை உருவாக்க முடிவு செய்து பெங்களூரில் இடம்தேடி வருகிறது. ஆனால், மாநில அரசு இதற்கு உதவ முன் வரவில்லை. மேலும் பெங்களூருக்கு வெளியிலேயே ஒரு ஏக்கர் நிலம் ரூ.35 லட்சம் என விவசாயிகள் பேரம் பேசி வருகின்றனர்.

சாதாரணமாக ரூ. 10 லட்சத்துக்கு விலை போகும் இந்த நிலங்களை சாப்ட்வேர் நிறுவனங்கள் விலைக்குக் கேட்கும்போது அதை ரூ.35 லட்சமாக உயர்த்திவிட்டனர் விவசாயிகள்.

இந்த விஷயத்தில் கர்நாடக அரசும் உதவ முன் வரவில்லை, அரசு அடையாளம் கண்டு ஒதுக்கிய நிலங்களும் இன்போசிசுக்குஏற்புடையதாக இல்லை. இதனால் அந் நிறுவனம் மன வருத்தத்தில் உள்ளது.

விப்ரோவின் கோபம்:

அதே போல விப்ரோ நிறுவன அதிபர் ஆஸிம் பிரேம்ஜியும் அவ்வப்போது கர்நாடக அரசை மிகக் கடுமையாக கண்டித்து வருகிறார்.

போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு வழி காணாவிட்டால் ஐடி உள்பட எல்லா துறைகளுமே வெகு சீக்கிரமே பெரும் சிக்கலைசந்திக்க வேண்டி வரும் என்று எச்சரித்துள்ள பிரேம்ஜி, தனது அடுத்த சாப்ட்வேர் திட்டங்களை வேறு மாநிலங்களுக்குக் கொண்டுபோய்விடலாமா என்று யோசித்து வருவதாகக் கூறியுள்ளார்.

மேலும் பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் ஒரு நிறுவனத்தை விட்டு இன்னொரு நிறுவனத்துக்குத் தாவுவது(attrition rate) மிக, மிக அதிகமாக இருப்பதாகவும், ஊதியமும் பல மடங்கு அதிகம் உள்ளதாகவும்கவலை தெரிவித்துள்ள பிரேம்ஜி, தேசிய அளவில் இந்த விகிதம் மிக அதிகமாக இருப்பதுபெங்களூரில் தான் என்கிறார்.

சாப்ட்வேர் பயம்:

கடந்த ஆட்சியில் முதல்வர் கிருஷ்ணா, சாபட்வேருக்கு மிக அதிக முக்கியத்துவம் தந்ததால் தான் விவசாயிகள் மற்றும் பிறபிரிவினர் காங்கிரசை தேர்தலில் தோற்கடித்தார்கள் என்ற பிரச்சாரமும் பலமாக உள்ளது. இதனால் தேவ கெளடாவின்மதசார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சியமைத்துள்ள காங்கிரஸ் முதல்வர் தரம்சிங், சாப்ட்வேர் குறித்து பேசுவதையேதவிர்த்து வருகிறார்.

மேலும் சாப்ட்வேர் நிறுவனங்கள் இணைந்து தொடங்கிய பெங்களூர் அஜென்டா டாஸ்க் போர்ஸ்அமைப்பையும் இயங்க விடாமல் செய்துவிட்டார்.

தயாநிதியிடம் புலம்பல்:

இந் நிலையில், கடந்த வாரம் பெங்களூர் வந்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் சாப்ட்வேர்நிறுவன அதிபர்களும் அதிகாரிகளும் தங்களது இடப் பிரச்சனையில் இருந்து அடிப்படைக் கட்டமைப்பு, போக்குவரத்து விவகாரம்வரை அனைத்து பிரச்சனைகள் குறித்தும் புலம்பித் தீர்த்தனர்.

உங்கள் ஊரில் விவசாயிகள் கூட IT tuned ஆகிவிட்டார்கள், சாப்டேவர் நிறுவனம் நிலத்தைக் கேட்டால்மூன்று மடங்கு விலையை உயர்த்துகிறார்கள். பெங்களூரின் realestate மதிப்பைப் பாருங்கள்,unreal ஆக உள்ளது என்ற தயாநிதி, இந்த விஷயத்தில் சாப்ட்வேர் நிறுவனங்கள் எடுக்கும்முடிவுகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று மட்டும் சொல்லிவிட்டுப் போனார்.

இந் நிலையில் இன்று பெங்களூர் வந்த தமிழக தகவல் தொடர்புத்துறைச் செயலாளர் விவேக்ஹரிநாராயணன், ஐடி, BPO நிறுவனங்களுக்கு தமிழகத்தைப் போன்ற அருமையான இடம் எதுவும்கிடையாது என்றார்.

சென்னை வீசும் வலை:

சென்னையின் சாப்ட்வேர் வளர்ச்சி குறித்து ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐடி ரோட் ஷோவானConnect 2004 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பெங்களூர் வந்த அவர் கூறியதாவது:

சென்னையைப் பற்றி மிகத் தவறான கருத்து நிலவுகிறது. BPO துறையில் சென்னை தான் இப்போதுமுதலிடத்தில் இருக்கிறது. பிஸினஸ் பிராஸசிங் தொழிலைப் பொறுத்தவரை பல நகர்களை பின்தள்ளிவிட்டு சென்னை எங்கேயோ போய்விட்டது.

சாப்ட்வேர் துறைக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் வேறு எந்த மாநிலத்தைவிடவும் மிகச் சிறப்பாக அமைந்துள்ள இடம் சென்னை. அதே போல அரசுகள் மாறினாலும் ஐடிவிஷயத்தில் கொள்கைகள் மாறுவதில்லை.

அதே போல சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தை விட்டு இன்னொன்றுக்கு ஊழியர்கள்தாவுவது மிகக் குறைவாக இருக்கும் இடமும் சென்னை தான். பெங்களூர், ஹைதராபாத்தில் பிபிஓநிறுவனங்களில் வேலையைவிட்டு விலகும் விகிதம் 50 முதல் 100 சதவீதமாக உள்ளது.சென்னையில் இது 13 சதவீதம் தான்.

இவ்வளவு இருந்தும் கூட ஐடி, BPO தொழில்துறையில் சென்னை ஏதோ பின் தங்கியிருப்பதைப்போல காட்ட மத்திய அரசு அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

தண்ணி கஷ்டம்:

சென்னையில் தண்ணீர் பஞ்சம் நிலவுவது உண்மை தான். ஆனால், அதை திறமையாக சமாளித்துவருகிறோம். சென்னை புற நகர்களில் நிச்சயம் தண்ணீர் போதுமானதாக உள்ளது. நகருக்குள் தான்பிரச்சனை நிலவுகிறது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் வரப் போகிறது. தமிழகம் எதையும்திறமையாக சமாளிக்கும்.

சென்னையைச் சுற்றி எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் ஐடி நிறுவனங்களுக்குத் தர நாங்கள் தயார்.இந்த ஆண்டுக்கு மட்டும் 50 லட்சம் சதுர அடி நிலத்தை ஒதுக்கி வைத்துவிட்டோம். பாரதி,விஎஸ்என்எல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் சென்னையில் 13.5 terra bytes per secondபிராட் பேண்ட் இணைப்பை உருவாக்கியுள்ளன. இது விரைவில் 16tbps ஆக உயரும்.

கோவையிலும்:

சென்னை மட்டுமல்லாமல் கோவையையும் தமிழகத்தின் இரண்டாவது சாப்ட்வேர் நகரமாகஉருவாக்கி வருகிறோம். ஐடி நிறுவனங்களுக்கான முத்திரைக் கட்டணம் நாட்டிலேயே மிகக்குறைவாக இருப்பது தமிழகத்தில் தான்.

கடந்த ஆண்டில் மட்டும் 100 புதிய ஐடி நிறுவனங்கள் சென்னையில் கிளைகளைத்தொடங்கியுள்ளன என்றார்.

Contact the writer

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X