For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோ: பொடா வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை - கடலூர்:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கை வாபஸ் பெறும் தமிழக அரசின் மனு மீது நாளைமறுதினம் தீர்ப்பு வழங்கப்படும் என பூந்தமல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என பொடா நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன் கூறியிருந்தார்.தீர்ப்பு வழங்கப்படவுள்ளதால் வைகோ உள்ளிட்ட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிஉத்தரவிட்டிருந்தார். ஆனால், நடை பயணத்தில் உள்ள வைகோ நீதிமன்றம் வரவில்லை. மற்ற 8 பேரும்ஆஜராகியிருந்தனர்.

இன்று நீதிமன்றம் கூடியதும், வைகோ உள்பட 9 பேர் மீதான வழக்கை பெறுமாறு தமிழக அரசு உங்களுக்குஅனுப்பிய உத்தரவின் நகல் கையில் இருக்கிறதா என்று அரசு வழக்கறிஞர் ஜெயக்குமாரிடம் நீதிபதி கேட்டார்.ஆனால், அந்த உத்தரவு தன்னிடம் இல்லை என வழக்கறிஞர் பதிலளித்தார்.

இதையடுத்து உத்தரவை வெள்ளிக்கிழமை கொண்டு வந்து சமர்பிக்குமாறும், தீர்ப்பை அன்றைய தினம்வழங்குவதாகவும் நீதிபதி கூறிவிட்டார்.

முன்னதாக வைகோ நடை பயணத்தில் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறுநீதிபதியிடம் அவரது வழக்கறிஞர் மனு கொடுத்தார்.

மயங்கி விழுந்த வைகோ:

இதற்கிடையே 27 நாட்களாக நடை பயணத்தில் இருக்கும் வைகோவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவுஏற்பட்டுள்ளது. இருப்பினும் தனது நடை பயணத்தை அவர் தொடர்ந்து கொண்டுள்ளார்.

திருநெல்வேலியில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி தனது மறுமலர்ச்சி நடைபயணத்தை தொடங்கினார் வைகோ. இந்தப்பயணம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதியன்று சென்னையில் முடிவடைகிறது.

சுமார் 2,000 தொண்டர்களும் நடந்து வரும் வைகோ கடந்த இரு நாட்களாக கடலூர் மாவட்டத்தில் நடந்துகொண்டுள்ளார். கீரப்பாளையம், புவனகிரி, தம்பிக்கு நல்லான்பட்டினம், மஞ்சக்குழி உள்ளிட்ட பலகிராமங்களுக்குச் சென்று பொது மக்களிடையே பேசினார்.

கடந்த ஒரு வாரமாக இரண்டாவது முறையாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள வைகோ நடை பயணத்தை கைவிடமறுத்துவிட்டார். கடும் வெயிலில் முட்லூர் என்ற இடத்தில் நேற்று விவசாயிகளிடையே பேசிக் கொண்டிருந்தவைகோ திடீரென மயக்கமடைந்தார். வியர்த்துக் கொட்டியபடி தடுமாறிய வைகோவுக்கு உடன் வரும் டாக்டர்அருள் தலைமையிலான குழு சிகிச்சை அளித்தது.

வைகோவுக்கு ரத்த அழுத்தம் குறைந்துவிட்டதால் மயக்கம் ஏற்பட்டதாக கூறிய டாக்டர் அருள், ஓய்வெடுக்குமாறுஅறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து அந்தக் கிராமத்திலேயே வைகோ ஓய்வு எடுத்தார்.

சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். நடை பயணத்தில் வைகோமயக்கமடைவது இது இரண்டாவது முறையாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X