• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்தியில் நடப்பது தமிழர்களின் ஆட்சி: ப.சிதம்பரம்

By Staff
|

சேலம் - காரைக்குடி:

மத்தியில் நடப்பது தமிழர்களின் ஆட்சி என நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பட்ஜெட்-2004 குறித்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைத்தாலும், மத்தியிலும் நாமேஎதிர்பாராத வெற்றி கிடைத்து ஆட்சியில் அமர்ந்திருக்கிறோம். இது நமது ஆட்சி. நமது ஆட்சி என்று சொல்லக்காரணம், தமிழர்கள் அதிக அதிகாரம் கொண்ட இலாகாக்களைப் பெற்றிருக்கும் ஆட்சி என்பதனால் தான்.

கடந்த பாஜக ஆட்சியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வளவு அதிகாரம் கொண்ட இலாகாக்கள்தரப்படவில்லை. மக்களவைத் தேர்தல் தோல்வியை பாஜகவால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் தான்ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கி, மரபுகளை கேவலப்படுத்தி நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல்தடுக்கிறார்கள்.

பட்ஜெட் மீது கூட விவாதம் நடத்த விடாமல் தடுத்தார்கள். பிரதமரைக் கூட பேச விடாமல் செய்தார்கள்.பார்லிமெண்ட் மரபுகளையே காக்க முடியாத பா.ஜ.கவால் எப்படி ஜனநாயகத்தைக் காக்க முடியும்? அவர்கள்மக்கள் விரோதிகள்.

பா.ஜ.கவைப் போலவே தேர்தல் தோல்வியை ஏற்க முடியாத நிலையில் தமிழக முதல்வரும் இருக்கிறார். சிலபேருக்கு தேர்தலே நடக்காமல் இருக்கக் கூடாதா என்று கூட நினைப்பு வருகிறது. அவர்களுக்கு செலக்டிவ்அம்னீசியா இருக்கக் கூடும். அதை யாரோ சொன்னதாக எனக்கு ஞாபகம்.

இந்தியாவில் உள்ள 10 கோடி விவசாயக் குடும்பங்களில் 4 கோடி பேர் தான் வங்கிகளில் கடன் பெற முடிகிறது.மற்ற 6 கோடிப் பேரும் கந்து வட்டிக் கும்பலிடம் கடன் வாங்கி நிலத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வருகின்றனர்.இதைத் தடுக்கவே விவசாயிகளுக்கான வங்கிக் கடனுக்கு அதிக நிதி ஒதுக்கியிருக்கிறேன்.

அந்தக் கடனை வங்கிகள் ஒழுங்காக வழங்க வேண்டும். அதை நானே நேரில் கண்காணித்து வருகிறேன்.தேவையில்லாத ஆவணங்களைக் கேட்டும், குளப்படியாக விதிமுறைகளைச் சொல்லியும் விவசாயிகளைவிரட்டியடிக்கும் வங்கி மேலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்.

அதே போல கல்விக்குக் கடன் தருவது வங்கிகளின் கடமை. எம்பிபிஎஸ், பிஇ போன்ற உயர் தொழில் கல்வி பயிலவிரும்பும் மாணவ, மாணவிகள் கடன் பெற வந்தால் ஜாமீன் கொண்டு வா, வீட்டுப் பத்திரம் கொண்டு வா என்றுஇல்லாத விதிமுறைகளைச் சொல்லி அதிகாரிகள் விரட்டியடிக்கின்றன.

அவ்வாறு ஒரு மாணவனின் உயர் கல்வி பாதிக்கப்பட்டாலும் வங்கி மேலாளர் தான் பொறுப்பேற்க வேண்டியநிலை வரும் என்று எச்சரிக்கிறேன். கடன் கொடுத்துவிட்டு வசூலாகாவிட்டால் எங்களைத் தானே பிடிப்பீர்கள்என்று வங்கி அதிகாரிகள் புலம்புவதும் எனக்குத் தெரியும்.

அவர்களது பயத்தைப் போக்கவும், கடன் விஷயத்தில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பைத் தரவும் 9ம் தேதிடெல்லியில் உயர் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறேன் என்றார்.

பின்னர் அவரிடம் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும் விவசாயிகளும் மனுக்களைத் தந்தனர்.அதையெல்லாம் வாங்கி தனக்குப் போர்த்தப்பட்ட சால்வையில் மூட்டையாகக் கட்டி தானே தூக்கிக் கொண்டுபோனார் சிதம்பரம்.

காரைக்குடியில்:

தனது சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கும் சென்ற சிதம்பரம் காரைக்குடிபகுதியில் சுற்றுப் பயணம் செய்தார். பின்னர் சிவகங்கை அருகே கல்லல் என்ற ஊரில் அவர் கிராம மக்களிடையேபேசியதாவது:

இந்தியா ஒளிர்கிறது என்று பாஜக கூட்டணி கூறி வந்தது. ஆனால் டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகியபெருநகரங்கள் ஒளிர்வதால் மட்டும் இந்தியா வளர்ந்து விட்டது என்று கூறி விட முடியாது. பெருநகரங்களுக்குஈடாக சிறு கிராமங்களும் பொலிவு பெற வேண்டும், வளர்ச்சி பெற வேண்டும்.

நகரங்களை மனதில் கொண்டு இந்தியா ஒளிர்கிறது என்று பாஜக கூட்டணி கோஷமிட்டு வந்தது. ஆனால் ஐக்கியமுற்போக்குக் கூட்டணியின் முக்கிய நோக்கமே, கிராமங்களை மேம்படுத்துவதுதான். கிராமங்கள் ஒளிர்கிறதுஎன்பதே எங்களது நோக்கம் என்றார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X