For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர் ஓட்டிய வைகோ !

By Staff
Google Oneindia Tamil News

செஞ்சி:

Vaikoமறுமலர்ச்சி நடை பயணத்தில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செஞ்சி அருகே வயலில்இறங்கி ஏர் ஓட்டினார்.

செஞ்சியில் இரவு தங்கிய வைகோ, காந்தி பஜார் பகுதி வழியாக நடை பயணத்தை மீண்டும்துவக்கினார். கோடிக்கொள்ளை என்ற கிராமம் வழியாக நடந்து சென்றபோது விவசாயிகள்ஏரோட்டிக் கொண்டிருக்க, தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு வயலில் இறங்கினார்.

விவசாயிகளுடன் அப் பகுதி பாசன வசதி பற்றி பேசிக் கொண்டிருந்த வைகோ, திடீரென ஏர்பிடித்தார். வைகோ ஏர் ஓட்டுவதைக் கேள்விப்பட்டு அப் பகுதியில் ஓடி வந்தனர்.

சிறிய வயதில் தனது கிராமத்தில் உள்ள தங்கள் குடும்ப நிலத்தில் அவ்வப்போது தானும்உழவர்களுடன் சேர்ந்து ஏரோட்டியதை அந்த மக்களிடம் நினைவுகூர்ந்தார் வைகோ.

தொடர்ந்து அவர் நடை பயணம் கிளம்ப, மழை பிடித்துக் கொண்டது. ஆனாலும் 13 கி.மீ. தூரம்மழையில் நனைந்தபடியே தனது நடையைத் தொடர்ந்தார். பின்னர் சேத்பட் பகுதியில் நடந்தபொதுக் கூட்டத்தில் பேசினார்.

வைகோவின் நடை பயணம் குறித்த செய்திகளை முக்கிய தமிழ்த் தொலைக்காட்சி உள்பட செய்திஊடகங்கள் பலவும் இருட்டடிப்பு செய்வதாக மதிமுகவினர் புலம்புகின்றனர். இந்தக் குறையைப்போக்க வைகோவின் நண்பரும் தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ்.தாணு விஜய் டிவியில்ஸ்லாட் வாங்கி வாரத்தில் ஒரு நாள் அரை மணி நேரம் சிறப்பு நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்.

விடியல் என்ற பெயரில் ஒளிபரப்பாகும் இந் நிகழ்ச்சியில் வைகோவின் இளமைப் பருவம், நடைபயண காட்சிகள், வைகோவிடம் பேட்டி, பொது மக்களின் கேள்விகளுக்கு அவர் அளிக்கும்பதில்கள் என அனைத்தும் இடம் பெறுகின்றன.

வைகோ அறிக்கை:

இந் நிலையில் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நமது மறுமலர்ச்சி நடை பயணம் சென்னையில் 15ம் தேதி முடிகிறது. அன்றைய தினம் தீவுத் திடலில்விழா நடக்கவுள்ளது. அதில் நதிகள் இணைப்பு குறித்து பல்துறை விற்பன்னர்கள் பங்கேற்கின்றனர்.

எவரெஸ்ட் சிகரம் ஏறிய மன்மோகன் சிங் கோஹில், இந்து ஆசிரியர் ராம், இயக்குனர் பாரதிராஜா,கவிஞர் வாலி, கலைப்புலி எஸ். தாணு, வலம்புரி ஜான், எம்.எஸ். உதயமூர்த்தி ஆகியோர்பேசுகின்றனர்.

வரும் 15ம் தேதி மதிமுகவுக்கு புதிய விடியலுக்கான நாள். இதில் தொண்டர்கள் அனைவரும்தவறாமல் பங்கேற்க வேண்டும். உங்களது பொருளாதார சூழலை நான் நன்கு அறிந்தவன். அதனால்தான் அடிக்கடி சென்னைக்கு வரச் சொல்வதில்லை. ஆனால், இது முக்கிய நிகழ்ச்சி என்பதால்தவறாமல் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளுங்கள்.

வாகனங்களில் வரும்போது மெதுவாக, பாதுகாப்பாக வாருங்கள் என்று கூறியுள்ளார் வைகோ.

தேர்தல் ஆணையத்துக்கு மதிமுக கடிதம்:

இதற்கிடையே, மதிமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்க அக் கட்சி6 வார காலம் அவகாசம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, பாமக உட்படநாடு முழுவதும் 9 கட்சிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்அனுப்பியது.

செப்டம்பர் 3ம் தேதிக்குள் இந்த நோட்டீசுக்கு பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

இந் நிலையில், மதிமுக பொது செயலாளர் வைகோ நடைபயணத்தில் இருப்பதால் உடனடியாக பதில் அளிக்க முடியாது என்றும் 6 வாரம்கால அவகாசம் வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு மதிமுக கடிதம் அனுப்பியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X