For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேது திட்டம்: ஜெ.பேசியதே கிடையாது- வைகோ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சேது சமுத்திரத் திட்டம் குறித்து முதல்வர் ஜெயலலிதா எப்போதும் பேசியது இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் காலத்தில் மதிமுக எடுத்த முயற்சிகள் குறித்து தான் நான் பேசினேன்.இதில் ஜெயலலிதாவைப் பற்றி நான் விமர்சிக்கவேயில்லை. ஆனால் என்னை கடுமையான வார்த்தைகளால்அர்ச்சித்து அவர் அறிக்கை தந்துள்ளார்.

1991ம் ஆண்டிலிருந்து 1996ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்போதைய பிரதமர்நரசிம்மராவை சந்தித்து இது குறித்து பேசியதுண்டா? 2001ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அப்போது பிரதமராகஇருந்த வாஜ்பாயைச் சந்தித்து சேது சமுத்திரத் திட்டம் குறித்து வலியுறுத்தியதுண்டா?

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 6 ஆண்டுகாலம் உறுப்பினராக இருந்தாரே, அப்போது இந்தத் திட்டம்குறித்துப் பேசியது உண்டா? ஒருக்காலும் இல்லை.

1998ல் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு வாஜ்பாயை பிரதமராக்க ஆதரவுக் கடிதம் கொடுக்காமல், ஊழல்வழக்குகளில் இருந்து விடுபட சட்டத்துறை உள்ளிட்ட சில துறைகளை அதிமுகவுக்கே தரவேண்டும் என்றுபிளாக்மெயில் செய்தார். அப்போதாவது அரசின் செயல் திட்டத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை சேர்க்க வேண்டும்என்று வலியுறுத்தினாரா? இல்லையே. பா.ஜ.கவினரிடம் பேசி செயல் திட்டத்தில் சேர்க்க வைத்தவன் நான் தான்.

அந்த வருடம் மதிமுக நடத்திய பெரியார் அண்ணா பிறந்தநாள் விழாவில் வாஜ்பாயை அழைத்து வந்து, சேதுசமுத்திரத் திட்டம் குறித்து உறுதியளிக்கச் செய்தேன். இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடமும்வலியுறுத்தினேன். இதன்பின்னர் இத் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கிய மன்மோகனுக்கு நடைபயணத்தின்போதே நன்றி தெரிவித்தேன்.

ஜெயலலிதா இதற்காக பிரதமரைச் சந்தித்தாரா? நன்றி தெரிவித்தாரா? இல்லவே இல்லை. வாஜ்பாயையேநாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தது நான் தான் என்று கூறிய ஜெயலலிதா, என்னை சிறுபிள்ளைத்தனமானவன்என்று அர்ச்சித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை என்று கூறியுள்ளார் வைகோ.

நானும் குரல் கொடுத்தேன்- ராமதாஸ்

இதற்கிடையே சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் குரல்கொடுத்து வந்திருக்கிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சேது சமுத்திரத் திட்டத்திற்கு என்னைத் தவிர வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று முதல்வர்ஜெயலலிதா கூறியிருக்கிறார். இத் திட்டத்தை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது 150 ஆண்டு கால கோரிக்கை.இது குறித்து வலியுறுத்தாத கட்சிகளே இல்லை.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் அங்கம் வகித்தபோது வாய்ப்பு கிடைத்த போதெல்லாம்இத் திட்டம் குறித்து வலியுறுத்தியிருக்கிறேன். கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு கூட அப்போதையகப்பல் போக்குவரத்துறை அமைச்சர் சத்ருகன் சின்காவை அவரது இல்லத்தில் சந்தித்து இது குறித்துபேசியிருக்கிறேன்.

ஆனால் 1998ல் அதிமுக வற்புறுத்தலின் பேரில் குறைந்த பட்ச செயல்திட்டத்தில் இந்த திட்டத்தை சேர்த்ததால்தான்இன்று அது நிறைவேறுவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். வாஜ்பாய் தலைமையில் புதிய அரசு அமைவதற்கானஆதரவு கடிதத்தைக் கொடுக்காமல் முதலில் இழுத்தடித்தவர் ஜெயலலிதா. பின்னர் நானும், வைகோவும் அவரைநேரில் சந்தித்து பேசியதின் பேரில் ஆதரவுக் கடிதத்தைக் கொடுத்தார்.

பின்னர் குறைந்தபட்ச செயல் திட்டம் வகுக்க கூட்டப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்தார். இந்தஉண்மைகளை எல்லாம மறைத்துவிட்டு, எங்களுக்கெல்லாம் சிபார்சி செய்ததாக இப்போது கதை அளக்கிறார்.வாஜ்பாய் அரசில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள இலாகா அதிமுகவிடம் இருந்தது.ஆனால் அப்போது அந்த திட்டத்தை நிறைவேற்ற ஜெயலலிதா என்ன முயற்சி மேற்கொண்டார்?

பின்னர் நாங்கள் எல்லாம் தொடர்ந்து வற்புறுத்தியும் அப்போதைய அரசுக்கு அத் திட்டத்தை நிறைவேற்றும் மனம்இல்லை. ஆனால் அந்த மனம் இப்போதைய அரசுக்கு இருக்கிறது. அதனால்தான் அனுமதி கிடைத்துள்ளது. இதுஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும். இதில் உரிமை கொண்டாடஅதிமுகவுக்கோ ஜெயலலிதாவுக்கோ எந்த உரிமையும் கிடையாது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X