For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக ஆட்சி ஊழல்: விசாரிக்க ஜெ. உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக ஆட்சியின் போது கூட்டுறவு வங்கிகளில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகார் குறித்துவிசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள்நடந்ததாக அதிமுக குற்றம் சாட்டி வந்தது. இந் நிலையில் அதுகுறித்து விசாரணை நடத்துமாறு முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து க மூத்த அதிகாரிகளின் உயர் மட்ட கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.

அதில் திமுக ஆட்சியின் போது வழங்கப்பட்ட கடன் விவரம், அதை பெற்றுள்ளவர்கள் விவரம், திருப்பிசெலுத்தப்பட்ட கடன், செலுத்தப்படாத கடன் ஆகிய விவரங்களை சேகரிக்க முடிவு செய்யப்பட்டது.அதனையடுத்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கண்ணன் மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகளின் தனிஅதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கூட்டுறவு வங்கிகளில் பினாமி பெயர்களில் பயிர் கடன் வழங்கப்பட்டதாகவும், பயிர் சாகுபடியே இல்லாமல்பயிற்கடன்கள் புதுப்பித்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே சர்வே எண் கொண்ட நிலத்தின் பெயரில் பலருக்கும்கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசுக்கு புகார்கள் வந்துள்ளன.

எனவே, கடந்த ஆகஸ்டு மாதம் 31ம் தேதி வரை திரும்பிவராத கடன்கள் குறித்து ஒரு மாதத்திற்குள் விசாரிக்கவேண்டும். இந்த விசாரணையை நடத்த மாவட்டத்துக்கு 300 முதல் 600 ஊழியர்கள் தேவைப்படலாம். அவர்களைதனித்தனி குழுக்களாக அமைத்து விசாரணைக்கு அனுப்ப வேண்டும். தொடக்க வங்கிக்கு தெரியாமல் இதைரகசியமாக வைத்திருக்க வேண்டும்.

1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை நடந்த கடன் முறைகேடுகள் குறித்த முழு விவரங்களும்விசாரிக்கப்பட வேண்டும். விசாரணையின் நம்பகத்தன்மைக்கு விசாரணை நடத்திய மத்திய கூட்டுறவு வங்கிஊழியர்களே பொறுப்பு ஏற்க வேண்டும். பொய்யான தகவல் தந்தால் அந்த ஊழியர் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.

போலி கடன்கள் வழங்கப்பட்டுள்ள இடங்களில் கடன் பெற்றவர்கள் பற்றிய விவரங்களை வங்கி செயலாளரிடம்வாக்குமூலமாக பெற வேண்டும். விசாரணை முடியும் வரை கூட்டுறவு துறை வங்கி ஊழியர்கள் யாரும் விடுப்பில்செல்லக்கூடாது.

அக்டோபர் முதல் வாரத்துக்குள் விசாரணை அறிக்கைகளை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கைகளின் அடிப்படையில் தவறாக கடன் பெற்றவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றுதெரிகிறது. சில அதிரடி கைதுகளும் அரங்கேறலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X