For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ- சிவராஜ் பாட்டீல் காரசார மோதல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

Sivraj Patilஆளுநர் ராம் மோகன் ராவை மாற்றும் விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் மத்திய உள்துறை அமைச்சர்சிவராஜ் பாட்டீலுக்கும் இடையே தொலைபேசியில் மிகக் காரசாரமான வாக்குவாதம் நடந்துள்ளது.

ராம்மோகன் ராவை மாற்ற தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது இன்றுவிவாதம் நடந்தது. அப்போது ஜெயலலிதாவுக்கும் சிவராஜ் பாட்டீலுக்கும் இடையே நேற்று நடந்த தொலைபேசிஉரையாடலை தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் விளக்கமாக எடுத்து வைத்து வாதிட்டார்.

அதன் விவரம்:

முதல்வர் ஜெயலலிதாவை சிவராஜ் பாட்டீல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போதுராம்மோகன் ராவை இடமாற்றம் செய்யப் போவதாக பாட்டீல் சொன்னார்.

அதற்கு ஜெயலலிதா, இது தொடர்பாக என்னுடன் ஆலோசிக்க போன் செய்தீர்களா? அல்லது தகவல் சொல்லபோன் செய்தீர்களா? என்று கேட்டார்.

இதற்கு பதில் தந்த பாட்டீல், ஆலோசிக்க எல்லாம் போன் செய்யவில்லை. சும்மா தகவல் தருவதற்கு தான் தொடர்புகொண்டேன் என்றார்.

இதையடுத்து ஜெயலலிதா, அது எப்படி மாநில அரசுடன் ஆலோசிக்காமல் நீங்கள் இந்த முடிவுக்கு வரலாம் என்றுகேட்டார்,

இதற்கு பாட்டீல், சர்க்காரியா கமிஷன் வேண்டுமானால் மாநில அரசுகளுடன் பேசித் தான் கவர்னரை முடிவுசெய்யலாம் என்று பரிந்துரை தந்திருக்கலாம். ஆனால், நாங்கள் இப்படித் தான். வழக்கமாக நாங்கள்இப்படித்தான் செய்வோம் என்று அதிரடியாக பதில் சொன்னார்.

மேலும் ராவை மாற்ற பல காரணங்கள் உள்ளன என்று கூறிய பாட்டீல், சுதந்திர தினத்தன்று ராம்மோகன் ராவ்கொடி கூட ஏற்றவில்லை என்றார்.

அப்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு, சுதந்திர தினத்தன்று கொடி ஏற்ற வேண்டியது முதல்வர் தானேஎன்றார்.

இதையடுத்து பாட்டீல், சுதந்திர தினத்தன்று மரப்புப்படி ஆளுநர் நடத்த வேண்டிய டீ பார்ட்டியை கூட அவர்நடத்தவில்லை. இவர் என்ன ஆளுநர். இதனால் அவரை மாற்றப் போகிறோம் என்றார்.

அப்போது ஜெயலலிதா, டீ பார்ட்டி தரவில்லை என்பதற்காக ஒரு ஆளுநரை மாற்றப் போகிறீர்களா என்றுகேட்டார்.

அதற்கு பாட்டீல், ஆமாம்.. அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்கள். ராவ் செய்தது மிகப் பெரிய குற்றம் தான். இந்தவிஷயத்தில் உங்களுக்கு இதற்கு மேலும் விளக்கம் தந்து கொண்டிருக்க நான் தயாராக இல்லை என்று பதில்தந்தார்.

மேலும், ஆந்திர ஆளுநர் பர்னாலாவிடம் பேசிவிட்டேன். அவர் தமிழக ஆளுநராகத் தயாராக இருக்கிறார்.இப்போதைக்கு அவர் தான் சரியான சாய்ஸ் என்று நான் நினைக்கிறேன் என்றார் பாட்டீல்.

இதற்கு முதல்வர் ஜெயலலிதா, ஐ யம் ஸாரி.. பர்னாலா தான் சரியான சாய்ஸ் என்று நீங்கள் வேண்டுமானால்நினைக்கலாம். நான் அப்படி நினைக்கவில்லை. இப்போதுள்ள ஆளுநர் ராவ் தான் மிகச் சிறந்தவர். அவர் எந்தஅரசியல் அமைப்பையும் சாராதவர். ஆந்திர மாநில போலீஸ் டிஜிபியாக இருந்தவர். ஆனால், பர்னாலாவோகருணாநிதியின் பரிந்துரையால் இந்தப் பதவிக்கு வர இருக்கிறார் என்றார்.

இவ்வாறு முதல்வருக்கும் சிவராஜ் பாட்டீலுக்கும் நடந்த தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்களை உச்சநீதிமன்றத்திடம் தமிழக அரசின் வழக்கறிஞர் சமர்பித்தார்.

வழக்கறிஞரின் வாதத்தையும், இந்த உரையாடல் குறித்த விளக்கத்தையும் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிலஹோத்தி, நீதிபதி தாக்கர், நீதிபதி நாலேகர் ஆகியோர்,

Jayalalithaஇந்த விவகாரம் வேறு எங்கோ தீர்க்கப்பட வேண்டியது. இதைக் கொண்டு வந்து எங்கள் மீது போடுகிறீர்கள்.இருந்தாலும் இதை விசாரிக்கிறோம். ஆனால், கவர்னரை நீக்க இடைக்காலத் தடையெல்லாம் விதிக்க முடியாதுஎன்று கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.

அடுத்த கவர்னராகப் போகும் பர்னாலா ஏற்கனவே தமிழக ஆளுநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.1989ல் பிரதமர் வி.பி.சிங்கின் ஆட்சியின்போது கவர்னராக்கப்பட்ட அவர் அப்போதைய முதல்வர் கருணாநிதிக்குமிக நெருக்கமானார்.

அடுத்து மத்தியில் ஆட்சிக்கு வந்த சந்திரசேகர் அரசு, ராஜிவ் காந்தி- ஜெயலலிதாவின் நெருக்குதலால்கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்தது.

ஆட்சிக் கலைப்புக்கு வசதியாக, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாகக் கூறி, ஆட்சியைக் கலைக்கபரிந்துரைக்குமாறு பர்னாலாவுக்கு மத்திய அரசு நெருக்குதல் தந்தது.

ஆனால் அப்படிப்பட்ட பரிந்துரைக்க முடியாது என்று மறுத்த பர்னாலா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுச்சென்றார். இதையடுத்து ஜனாதிபதியாக இருந்த ஆர். வெங்கட்ராமன் மூலம் தமிழக ஆட்சி கலைக்கப்பட்டது.

இப்போது காலச் சக்கரம் ஒரு முழு சுற்று சுற்றிவிட்ட நிலையில், மீண்டும் பர்னாலாவே கவர்னராக இருக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X