For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆளுநர் மாற்றம்: காங், திமுகவில் அதிருப்தி, அதிமுகவில் குஷி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவை மாற்றுவதற்கு மத்தியஉள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறியுள்ளகாரணங்கள் அவருக்கு காங்கிரஸ் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவரதுஅமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆளுநர் ராம்மோகன் ராவை மாற்ற தமிழகத்தில் திமுக படு தீவிரமாக இருந்து வந்தது. இதை எப்படிச் சமாளிப்பதுஎன்ற குழப்பத்தில் இருந்த காங்கிரஸ் வேறு வழியில்லாமல் திமுகவின் நெருக்குதலுக்குப் பணிந்து ராவை தூக்கிவிட்டு தற்போது பர்னாலாவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

ராம்மோகன் ராவுக்காக மிக தீவிர ஆதரவு தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா அந்த முயற்சியில் தோற்றுவிட்டாலும்கூட அரசியல் அரங்கில், தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டுள்ளதாகவே கூறப்படுகிறது.

இதற்கு முக்கியக் காரணம் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் அணுகுமுறை. ராம்மோகன் ராவைமாற்ற இரண்டு காரணங்களை ஜெயலலிதாவிடம் தொலைபேசியில் பேசியபோது பாட்டீல் தெரிவித்துள்ளார்.இந்த இரண்டு காரணங்களும் இப்போது அரசியல் வட்டாரத்தில் கேலி செய்யப்படுகிறது. இதனால்காங்கிரஸுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.

பாட்டீல் கூறிய முதல் காரணம், சுதந்திர தினத்தன்று ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றவில்லை என்பது,இரண்டாவது காரணம் தேநீர் விருந்து நடத்தவில்லை என்பது. இந்த இரண்டும் உப்புச்சப்பில்லாத, கத்துக்குட்டிக்காரணங்களாக அரசியல் வட்டாரத்தில் வர்ணிக்கப்படுகிறது.

சுதந்திர தினத்தன்று மாநில அளவில் முதல்வர்தான் கொடியேற்றுவார். மாவட்ட அளவில் ஆட்சித் தலைவர்கள்கொடியேற்றுவார்கள். இந்த அடிப்படை உண்மை கூட சிவராஜ் பாட்டீலுக்குத் தெரியாதா என்று காங்கிரஸ்வட்டாரத்திலேயே கேலி செய்கிறார்கள்.

அதேபோல, தேநீர் விருந்து அளிக்கவில்லை என்ற காரணம் படு சாதாரணமானது என்று கூறுகிறார்கள். அந்தசமயத்தில் ராவ் வெளிநாடு சென்று விட்டார். அவர் வெளிநாடு செல்ல அனுமதி கொடுத்ததே மத்திய உள்துறைஅமைச்சகம்தான்.

அனுமதியும் கொடுத்து விட்டு, ஏன் தேநீர் விருந்து நடத்தவில்லை என்று கேட்கும் சிவராஜ் பாட்டீலைப் பார்த்துஅழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை என்று கேட்கிறார்கள் அதிமுகவினர்.

இப்படியாக சிவராஜ் பாட்டீல் நடந்து கொண்ட விதம் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் பெரும் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது. அவரது அவரசக் குடுக்கை நடவடிக்கையால் திமுகவுக்குத்தான் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாகதிமுகவினரும் புலம்புகிறார்கள்.

சிவராஜ் பாட்டீல் தன்னுடன் பேசியதை ஜெயலலிதா அம்பலப்படுத்தியது குறித்து காங்கிரஸும், திமுகவும் லபோதிபோவென்று அடித்துக் கொண்டாலும் கூட, இதன் மூலம் சிவராஜ் பாட்டீலின் குளறுபடியையும், காங்கிரஸ்,திமுகவின் அவசரத்தையும் ஜெயலலிதா வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார் என்று அரசியல் வட்டாரத்தில்கூறப்படுகிறது.

இப்படிச் செய்ததன் மூலம் ஜெயலலிதா அரசியல்ரீதியாக வெற்றி பெற்றுள்ளதாகவே பேசப்படுகிறது. மேலும்பர்னாலா வந்து விட்டால் மட்டும் திமுகவுக்கு பலம் கூடி விடும் என்று கூற முடியாது.

பர்னாலா என்னதான் திமுகவுக்கு ஆதரவாக நடந்து கொண்டாலும், ஜெயலலிதாவுக்கு அதிகபட்ச நெருக்கடிகளைக்கொடுக்க முடியாது என்பதுதான் நிதர்சனமாக இருக்க முடியும். மேலும், வீரப்பன் வதம், வீராணம் தண்ணீர் எனஜெயலலிதாவுக்கு செல்வாக்கு கூடிக் கொண்டே போகிறது. இதன் மூலம் ஜெயலலிதாவை இப்போது சீண்டினால்அதன் நஷ்டம் தனக்குத்தான் என்பதை திமுகவும் உணர்ந்திருக்கும்.

மொத்தத்தில் ராவ் போனதால் ஜெயலலிதாவுக்கு சிறு நஷ்டம்தான் என்றாலும் பர்னாலா வருவது அவருக்குபெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றே அதிமுக தரப்பிலும் பலமாக நம்பப்படுகிறது.

அமைச்சர் பதவி பறிப்பு:

இதற்கிடையே நாளை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.அப்போது ஆளுநர் மாற்றத்தின்போது சிவராஜ் பாட்டீல் செய்த தவறுகளுக்காக அவரது அமைச்சர் பதவிபறிக்கப்படும் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X