For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு: ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

நாகப்பட்டனம்:

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உடனடி நிவாரணப் பணிகளைமேற்கொள்வதற்காக ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வெள்ள பாதிப்புகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. குறிப்பாக நாகை, திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு கடுமையாக உள்ளது.இந்த மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், வீடுகள், வயல்கள் மூழ்கி வருகின்றன.

திருவாரூரில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 1.25 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால் பொதுமக்கள் கல்யாண மண்டபங்கள், பள்ளிக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் அனைத்தும் கரைபுரண்டோடி வருகின்றன.

நாகை மாவட்டத்திலும் மழை பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு கொள்ளிடம் ஆற்றில்வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. முடிகொண்டான் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் வெள்ள நீர்புகுந்து விட்டது.

தஞ்சை மாவட்டத்திலும், வீடுகள், வயல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகைமாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் இருப்பதாலும், தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும் அங்குபள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நெய்வேலி இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அங்கு மின் உற்பத்தியும்பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் மழையின்போது சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தில்3 பேர் பலியாகினார்கள்.அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் இருவர் சுவர் சரிந்ததில் பலியானார்கள். மாநிலம் முழுவதிலும் அறுந்துவிழுந்த மின்சாரக் கம்பிகளை மிதித்து 8 பேர் இறந்தார்கள்.

கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் தரும் பூண்டி, செங்குன்றம், சோழாவரம் ஏரிகளில் கணிசமானஅளவுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு குடிநீர் பிரச்சினை ஓரளவிற்குத் தீரும் என்ற நிம்மதிசென்னை மக்களிடம் உண்டாகியுள்ளது.

இந்தக் கனமழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

ஜெ.நிவாரணம்:

இதற்கிடையே மழை, வெள்ள நிவாரணத்திற்கு ஜெயலலிதா ரூ. 5 கோடி ஒதுக்கியுள்ளார். இது தொடர்பாக அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளஉத்தரவிட்டுள்ளேன். கடலூர் மாவட்டத்தில் நான்கு நாட்களாக பெய்த கன மழை காரணமாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் 25 கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இங்கு பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பானஇடங்களுக்குக் கொண்டு செல்லுமாறும், உணவு வழங்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

விழுப்புரம் மாவட்டத்தில் குடிசைகள் சேதமடைந்துள்ளன. கோமுகி, மணிமுக்தா ஆகிய அணைகள் நிரம்பிவழிகின்றன. இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. நாகைமாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 35,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. வயல்களை சூழ்ந்திருந்த தண்ணீர்வடிந்து வருகிறது. தண்ணீர் முற்றிலும் வடிந்த பிறகு பயிர் சேதம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுஉரிய நிவாரணம் வழங்கப்படும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது. திருவாரூர்,தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக குளங்கள், கண்மாய்கள் வேகமாகநிரம்பி வருகின்றன. இவற்றில் ஏற்பட்ட உடைப்புகள் உடனடியாக சரிசெய்யப்பட்டுள்ளன.

உதகை-மேட்டுப்பாளையம் சாலை மழை வெள்ளத்தால் சேதமடைந்திருந்தது. அதில் ஒரு பகுதி சாலைபோக்குவரத்திற்கேற்ற வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துமாவட்டங்களிலும் உடனடி நிவாரணப்பணிகள், உணவு ஆகியவற்றை வழங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில்ஏற்பட்டுள்ள பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்ய வேளாண்துறை ஆணையர் ஜக்மோகன் ராஜு நாளை அங்குசெல்லவுள்ளார்.

மழை வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளேன்என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X