For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் இந்தியா பரிதாப தோல்வி

By Staff
Google Oneindia Tamil News

கொல்கத்தா :

Sewagஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பவள விழாவை முன்னிட்டு கொல்கத்தாவில் நடந்த ஒரு நாள் போட்டியில் ஆறுவிக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இந்தியாவை வென்றது.

இந்தியக் கேப்டன் சவுரவ் கங்குலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆட்டத்தை துவக்கிய சேவக் - சச்சின் ஜோடிஅடித்து ஆட ஆரம்பித்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சச்சின் 16 ரன்களில் ரன்-அவுட் ஆனார். அடுத்து ஆட வந்த லட்சுமணும்அதிரடி ஆட்டம் ஆடினார்.

லட்சுமண் (43), சேவக் (53) இருவரையும் அப்ரிடி வெளியேற்றினார். அடுத்து ஜோடி சேர்ந்த கங்குலி, டிராவிட் ஜோடிநிதானமாக ஆடத் தொடங்கியது. டிராவிட் 16 ரன்களில் அவுட்டான பின்பு வந்த யுவராஜ் சிங் பாகிஸ்தான் பவுலர்களை விளாசஆரம்பித்தார்.

மறுமுனையில் கங்குலி 48 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் யுவராஜ் தொடர்ந்து அடித்து ஆடினார். 10 பவுண்டரி, 2 சிக்சருடன்62 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். ஆட்டம் முடிய ஒரு பந்து மீதம் இருக்கையில் கேட்ச் அஜ்ட்டானார். இறுதியில் இந்தியா 6விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியாவின் அதிகப்பட்ச ஸ்கோர்இதுவேயாகும்.

பேட்ஸ்மேன்கள் போட்டு வைத்த அடித்தளத்தை பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. 4 விக்கெட்களைமட்டுமே இழந்து 49 ஓவர்களில் பாகிஸ்தான் 293 ரன்களை எடுத்து விட்டது.

ஒரு நாள் போட்டிகளில் முதல் சதத்தை நேற்று எடுத்த பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் தரப்பில் இன்சமாம் 75 ரன்கள் எடுத்தார்.

Yuvarajபோட்டியின்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்கள் கெளரவிக்கப்பட்டனர். முதல் பாதி ஆட்டநேரமுடிவில் மைதானத்தில் இந்த பாராட்டு விழா நடந்தது. பரிசுகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் தத்வழங்கினார்.

பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக், சச்சின், செளரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் முன்னாள் கேப்டன்கள் இன்தியாஸ்அகமது, ஹனீப் முகமது, நாரி கான்ட்ராக்டர், சந்து போர்டே, இன்திஹாப் ஆலம், வெங்கட்ராகவன், பிஷன் சிங் பேடி, குண்டப்பாவிஸ்வநாத், அஜித் வடேகர், ஜாகிர் அப்பாஸ், இம்ரான் கான், திலீப் வெங்சர்கார், கபில்தேவ், ரமீஸ் ராஜா, ரவி சாஸ்திரி மற்றும்வக்கார் யூனிஸ், மேட்ச் ரெப்ரி கிளைவ் லாயிட் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது

.துபாயில் நடந்து வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள சுனில் கவாஸ்கர் சென்றுள்ளதால் அவர்விழாவில் பங்கேற்கவில்லை.

ஐ.சி.சி. ரேங்கிங்: 7 வது இடத்தில் இந்தியா

இதற்கிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தரவரிசைப் பட்டியலில் ஒரு நாள் போட்டிகளில் 7வது இடத்தையும், டெஸ்ட்போட்டிகளில் 4வது இடத்தையும் இந்தியா பிடித்துள்ளது. இரண்டு வரிசையிலும் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X