சினிமா படப்பிடிப்புகள் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சினிமா லைட்ஸ்மேன் சங்கத்தினர் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் தமிழகம் முழுவதும் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன.
பெப்சி கூட்டமைப்பில் ஒளிப்பதிவாளர்கள் சங்கம், சண்டைக்கலைஞர்கள் சங்கம், நடனக் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்டபல்வேறு திரைப்பட சங்கங்கள் உள்ளன. இதில் லைட்ஸ்மேன்கள் சங்கம் இல்லை.
பெப்சி கூட்டமைப்பில் லைட்ஸ்மேன்கள் சங்கத்தையும் சேர்க்கக் கோரியும், வேறு சில கோரிக்கைகளை வலியுறுத்தியும்லைட்ஸ்மேன்கள் அனைவரும் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் சினிமா படப்பிடிப்புகள்எதுவும் நடக்கவில்லை.












Click it and Unblock the Notifications