விஜயேந்திரரை சந்தித்த எம்.பிக்கள் குழு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
நாடாளுமன்ற நீர் வளத்துறை நிலைக் குழுவைச் சேர்ந்த 11 எம்.பிக்கள் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரரை சந்தித்துப்பேசினர்.
நீர் வள ஆதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவைச் சேர்ந்த 11 எம்.பிக்கள் கொண்ட குழு காஞ்சிபுரம் வந்தது. அங்குள்ளசங்கர மடத்திற்குச் சென்ற எம்.பிக்கள் விஜயேந்திரரை சந்தித்துப் பேசினார்கள்.
பின்னர் குழுவில் இடம் பெற்றிருந்த எம்.பிக்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜயேந்திரரை எங்களது சொந்தவிருப்பத்தின் பேரில் சந்திக்க வந்தோம். கைது தொடர்பாக விஜயேந்திரரிடம் எதுவும் விவாதிக்கவில்லை என்றனர்.
இந்த எம்பிக்களில் பெரும்பாலான எம்.பிக்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications