For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே அரசு நம்ம அரசு தான்...ஜெ

By Staff
Google Oneindia Tamil News

ஆண்டிப்பட்டி & தூத்துக்குடி:

Jaya inaugurates medical college hospitalபொது மக்கள் மற்றும் விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் ஒரே அரசு, இந்தியாவிலேயே தமிழக அரசுமட்டும்தான் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

தமிழகத்தில் எல்லாத் தொகுதிகளும் எனது தொகுதிகள்தான். இருப்பினும் சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டி மீது கூடுதல்பாசமும், அக்கறையும் இருப்பது இயல்பு தானே என்றும் அவர் கூறினார்.

ஜெயலலிதா இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம்ஆண்டிப்பட்டி சென்றார். அங்கு அவரை அமைச்சர்க ஓ. பன்னீர்செல்வம், தேனி மாவட்ட ஆட்சியர் சுனில் பாலிவால்உள்ளிட்டோர் வரவேற்றனர்.

ஆண்டிப்பட்டியில்...

அங்கிருந்து விழா மேடைக்கு காரில் சென்றார். மகளிர் சுய உதவி குழுவினர் அமைத்திருந்த கண்காட்சியை பார்த்தார். பின்னர் ரூ.48 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள அரசு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஜெயலலிதா இன்று தொடங்கிவைத்தார். (விரைவில் இங்கு மருத்துவக் கல்லூரியும் செயல்படவுள்ளது).

ரூ. 74 கோடி மதிப்பில் ஆண்டிப்பட்டி, சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்டம், ரூ. 34.11கோடி செலவில் கம்பத்தில்அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையம், ரூ. 14.70 கோடி செலவில் சண்முகா நதிநீர் தேக்க திட்டம்,

ரூ. 94.5 லட்சம் மதிப்பில் ஆண்டிப்பட்டி, மயிலாடும்பாறை, அல்லிநகரம் ஆகிய இடங்களில் அரசு மாணவ-, மாணவிகள் விடுதிகட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். அதன் பின்னர் ரூ. 49.39 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படவுள்ள மஞ்சளாறுவடிகால் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

அதோடு வேலூர், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கான கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

மேலும் ரூ. 64.80 கோடி மதிப்பபிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ. 6.15 கோடி மதிப்பில் பல்வேறுநலத்திட்ட உதவிகளை 12,159 பேருக்கு வழங்கினார்.

ஏழைகளுக்காக..

நிகழ்ச்சியில் ஜெயலலிதாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

பின்னர் ஜெயலலிதா பேசுகையில்,

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும் எனது தொகுதிதான். இருப்பினும் ஆண்டிப்பட்டி எனது சொந்தத் தொகுதி என்பதால்அதன் மீது கூடுதல் அக்கறை காட்டுவது இயல்பான ஒன்றுதானே. அதில் தவறு ஒன்றும் இல்லையே.

ஆண்டிப்பட்டியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டிருப்பதன் முக்கிய நோக்கமே, ஆண்டிப்பட்டி மற்றும்சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் பலனடைய வேண்டும் என்பதுதான்.

சிறந்த மருத்துவக் கல்வி மூலம் சிறந்த மருத்துவர்களை உருவாக்கினால்தான் அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு நல்லமருத்துவம் அளிக்க முடியும்.

எந்தவித வேற்றுமையும், பேதம் பாராமல் கடமையே கண்ணாக இருக்கும் மருத்துவர்களை தமிழக மருத்துவக் கல்லூரிகள்உருவாக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

தூத்துக்குடியில்...

The new hospital building in Andipattiஜெயலலிதா வருகையை முன்னிட்டு தேனி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.1,500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட்டிருந்தனர்.

இந்த விழாவையடுத்து ஜெயலலிதா ஹெலிகாப்டரில் தூத்துக்குடி சென்றார். அங்கு அனல் மின் நிலையத்தின் 25வது ஆண்டு விழாவில் அவர் கலந்து கொண்டு பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர்பேசுகையில்,

இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு முழு அளவில் இலவச மின்சாரம் தருவது தமிழக அரசு மட்டும்தான்.

ஒரே அரசு நம் அரசு தான்...

அது மட்டுமல்லாது 1 கோடிக்கும் அதிகமான வீட்டு உபயோகிப்பாளர்களுக்கு வெகுவாக மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.வீட்டு உபயோகிப்பாளர்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வினியோகம் செய்வதற்காக மின்வாரியத்திற்கு ஆண்டுக்குரூ. 910 கோடியை தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.

இவ்வாறு பொது மக்கள் மற்றும் விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் ஒரே அரசு இந்தியாவிலேயே தமிழக அரசுமட்டும்தான் என்றார் ஜெயலலிதா.

திருநெல்வேலியில்...

பின்னர் திருநெல்வேலி செட்டிகுளம் சென்ற ஜெயலலிதா அங்கு ரூ. 13 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய காற்றாலைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X