அண்ணா பல்கலைக்கழகத்தில் வாகனங்களுக்கு தடை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்வதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாகவும், கல்வி கற்கும்மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பொறியியல்கல்லூரி முதல்வர் ஆர்.ராம்பிரபு சில முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார்.

அதன்படி இன்று முதல் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்தில்வாகனங்களை நிறுத்த மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டு விட வேண்டும். அதன் பிறகு போக வேண்டிய துறைக்குநடந்தோ அல்லது சைக்கிளிலோதான் செல்ல வேண்டும்.

ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் தவிர வெளியாரின் வாகனங்கள் உள்ளே வர அனுமதி பெற வேண்டும். ஆசிரியர்கள்,மாணவர்கள், அலுவலர்களின் வாகனங்களை அடையாளம் கண்டு கொள்வதற்காக 3 நிற ஸ்டிக்கர்கள் வழங்கப்படும்.

இதேபோல, பல்கலைக்கழக வளாகத்திற்குள் உயர் அதிகாரிகள் சென்று வர வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ளது போன்ற பாட்டரிகார்களைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

சப்தமோ, புகை மாசோ இல்லாத இந்த வகை வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்தவும் அண்ணா பல்கலைக்கழகத்திற்குப்பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரி முதல்வரின் இந்த புதிய உத்தரவால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கல்லூரி விடுதிக்கும், கல்லூரி,பல்கலைக்கழகத்திற்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ளது. மேலும் ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குஅடிக்கடி செல்ல வேண்டியுள்ளது.

ஒவ்வொரு துறையும் ஒரு மூலையில் இருக்கும் நிலையில் அடிக்கடி நடந்து சென்றோ, சைக்கிளில் செல்வதோ மிகவும் சிரமமாக இருக்கும்என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+