• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அப்பு பினாமி வீட்டில் ரெய்ட்: ரூ. 50 கோடி சொத்து!

By Staff
|

காஞ்சிபுரம்:

Appu கூலிப் படைத் தலைவன் அப்புவின் ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள் பிடிபட்டுள்ளன.அவன் பயன்படுத்தி வந்த போர்ட் ஐகான் கார் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் அப்புவின் பினாமியாகக் கருதப்படும் பாஸ்கர் என்வரின் வீட்டில்போலீசார் நேற்று முன் தினம் இரவு அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அப்புவின் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய 13 பைல்கள் பிடிபட்டன. ஆந்திரா,கர்நாடகா, தமிழகம் உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள அப்புவின் நிலங்கள், பங்களாக்கள், தோட்டங்கள்,கார்களின் ஆவணங்கள் அதில் இருந்தன.

சென்னையில் மகாகவி நகரில் ஒரு பெரிய பங்களா, ஆழ்வார்பேட்டையில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் (இதன்மூம்கிடைக்கும் மாத வருவாய் ரூ. 20 லட்சம்), தாம்பரத்தில் இரு பங்களாக்கள் ஆகியவற்றின் ஆவணங்களும்பிடிபட்டன.

இதைப் போல தனது பார்ட்னர்கள் பலரிடமும் அப்பு தனது சொத்துக்களின் ஆவணங்களை பதுக்கிவைத்திருப்பதாக போலீசார் கூறுகின்றனர். அப்புவின் பிற பினாமிகள், பார்ட்னர்களின் விவரங்களையும் போலீசார்சேகரித்து வருகின்றனர்.

சாராயம் காய்ச்சுதல், போதை பொருள் கடத்தல், மரக் கடத்தல், ஆள் கடத்தல், கூலிக்கு ஆட்களைக் கொல்லுதல்,கட்டப் பஞ்சாயத்து, அரசியல்வாதிகளை வைத்து காரியம் சாதித்துத் தருவது, மணல் கடத்தல், குவாரிகள்,விவசாயம் என பல வகைகளிலும் பணம் ஈட்டிய அப்புவுக்கு ரூ. 400 கோடி அளவுக்கு சொத்து இருக்கலாம் என்றுகணக்கிட்டுள்ளது காவல்துறை.

இந் நிலையில் அப்பு பயன்படுத்தி வந்த கார்களில் ஒன்றான போர்ட ஐகான் காரை சென்னை ஆழ்வார்ப்பேட்டைமுதலாவது மெயின் ரோட்டில் வசிக்கும் ஒரு டாக்டரின் வீட்டிலிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மகேஸ்வரன் என்ற இந்த டாக்டரின் வீட்டில்தான் முதலில் அப்பு வாடகைக்கு இருந்துள்ளான்.

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டபோது கூலிப் படையில் இடம் பெற்றிருந்த ஆனந்தகுமார் என்பவனுக்கும்லேசான காயம் ஏற்பட்டது. அப்போது டாக்டர் மகேஸ்வரன்தான் ஆனந்தகுமாருக்கு சிகிச்சை அளித்ததாககூறப்படுகிறது.

டாக்டர் மகேஸ்வரனிடம் இருந்து அப்புவின் காரை பறிமுதல் செய்த காஞ்சிபுரம் போலீஸார் அவரிடமும் தீவிரவிசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அப்பு குறித்த பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்தாகத் தெரிகிறது. பறிமுதல் செய்யப்பட்ட அப்புவின்காரை காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தமராஜனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

அதை போலீஸாரே தங்கள் வசம் பத்திரமாக வைத்திருக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அப்புவை நெருங்கிவிட்டோம்: போலீஸார்

இதற்கிடையே ஜெயேந்திரர் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறவிருப்பதால் டெல்லியில் முகாமிட்டிருக்கும் காஞ்சிபுரம்மாவட்ட கூடுதல் எஸ்.பி. சக்திவேல் நிருபர்களிடம் பேசுகையில்,

தலைமறைவாக இருக்கும் அப்பு தினமும் செல்போனில் தனது உறவினர்களுடன் பேசி வருகிறான். அதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். அவனைகிட்டத்தட்ட நெருங்கி விட்டோம். விரைவில் பிடித்து விடுவோம் என்றார் நம்பிக்கையுடன்.

ஆனால், அவன் இலங்கை முன்னாள் பிரதமருக்கு மிக நெருக்கமான பிரபல சென்னை ஹோட்டல் உரிமையாளர் உதவியுடன் கொழும்புவுக்குத்தப்பியோடிவிட்டான் என்றும் கூறப்படுகிறது.

போலீஸிடம் சிக்கிய ரவியின் கடிதம்:

இதற்கிடையே ரூர்கேலாவில் ரவி சுப்பிரமணியம் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றில் போலீஸார் சோதனை நடத்தியபோது, ஒரு கடிதம்கைப்பற்றப்பட்டதாகவும், அந்தக் கடிதத்தில் முக்கியமான பல விவரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X