For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக கூட்டணி உடையாது: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எந்த சதி செய்தாலும், எத்தகைய அவதூறுகள் பரப்பினாலும், திமுக கூட்டணி பிரியாது, ஒருங்கிணைந்தே வரும் சட்டசபைத் தேர்தலைசந்திக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் 83வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில்நேற்று முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இறுதியில் மாலையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்கலந்து கொண்ட கூட்டம் நடத்தப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு,மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், நாடாளுமன்றத்தில் வெற்றிக் கொடி நாட்டிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி, எதிர்வரும்சட்டசபைத் தேர்தலிலும் நீடிக்குமா, இணைந்து இருப்பார்களா என்ற குழப்பத்தை சிலர் ஏற்படுத்தி வருகிறார்கள்.

மக்களையும், கட்சித் தலைவர்களையும் குழப்பும் பணியில் சில வாரப் பத்திரிக்கைகள் ஈடுபட்டுள்ளன. இதைப் போக்கும் முயற்சியாகஅனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் வகையில் பேராசிரியர் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட முடிவுசெய்யப்பட்டது.

இந்தக் கூட்டணி தொடரும் என்று இந்த நேரத்தில் கூறிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். இனிவரும் திமுக மாநிாடுகளிலும் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக் கனி ஈட்டிய இந்தக் கூட்டணி எதிர் வரும் சட்டசபைத்தேர்தலிலும் தொடரும்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் தஞ்சையில் ஒரு மாநாடும், ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்லில்ஒரு மாநாடும் நடைபெறவுள்ளது. இந்த மாநாடுகளில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள்.

எனக்கும் பேராசிரியருக்கும் இடையே சில முறை கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது கணவன், மனைவி இடையே ஏற்டும்கருத்து வேறுபாடு போலத்தான் இருந்ததேயன்றி, அறுந்து போகும் அளவுக்கு போனதில்லை.

பேராசியர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் இருப்பதைப் பாராட்டிப் பேசினர். ஒரே இடத்தில் இருப்பதைப் பற்றி இமயமலைபெருமைப்பட்டுக் கொள்கிறதா என்ன? திமுகவே அவருடையது எனும்போது அவர் இதை விட்டு எங்கே போவார் என்றார் கருணாநிதி.

நிகழ்ச்சியில் 83 நூல்கள் அடங்கிய தொகுப்பை அன்பழகனிடம் கருணாநிதி அன்பளிப்பாக வழங்கினார். ஒரு அலமாரியில் வைத்து இந்தப்புத்தகங்கள் அன்பழகனிடம் வழங்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X