For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரசிகர் மன்றங்கள் ஒழிய வேண்டும்: ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் தேவையில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயரிடக்கோரி வள்ளூவர் கோட்டம் முன்பு தமிழ் பாதுகாப்பு இயக்கத் தலைவரும்விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பாமக நிறுவனர் ஜி.கே.மணி, இயக்குனர்தங்கர்பச்சான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது ராமதாஸ் பேசியதாவது:-

முழுக்க முழுக்க தமிழ் வசனங்களுடன் குறைந்த முதலீட்டில் படங்களை தயாரியுங்கள். நாங்கள் அந்த வெற்றிகரமாக ஓடச்செய்கிறோம். தமிழில் பெயர் வையுங்கள் என்று அன்பான எச்சரிக்கை விடுத்தோம் அது இன்றுடன் முடிவடைகிறது.

இனியும் வேறு மொழியில் சினிமா தலைப்பை வைத்தால், அதை எதிர்த்து மொழிப் போராட்டத்தை மிஞ்சும் வகையில் வரலாறுகாணாத மிகப் பெரிய போராட்டத்தை நடத்தவிருக்கிறோம். அது குறித்து விரைவில் அறிவிப்போம்.

வேறு ஏதாவது மாநிலத்தில் இருந்து இங்கு வருகிறார்கள். நமது ரசிகர்களை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள்.ஆட்டம் முடிந்த பிறகு அரசியலுக்கு வருகிறார்கள். எனவேதான் நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் கூடாது என்று கூறி வருகிறேன்என்றார்.

தங்கர்பச்சான்:

இயக்குனர் தங்கர்பச்சான் பேசுகையில்,

திரைப்படத் துறையில் என்னுடன் வேலை பார்ப்பவர்கள் என்னை வேறுபடுத்தி பார்க்கிறார்கள். அதற்கு காரணம் நான் தமிழுக்குஆதரவாக இருப்பதுதான்.

அண்மையில் வந்த மகாநடிகன் படத்தில், படத்தின் பெயரை மாற்ற முடியாது. நீங்கள் வேண்டுமானால் கட்சிகள் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள் என்று வசனம் வருவதாக ஒரு பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இயக்குனர்கள் எழுதிக்கொடுத்த வசனத்தை தன் அறிவை பயன்படுத்தாமல் அப்படியே சொல்லி விட்டு போகாதீர்கள். எங்கள்கலாச்சாரம், பண்பாட்டை வியாபாரம் ஆக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்காவில்லை என்றால் தமிழ்நாட்டை விட்டுப் போய்விடுங்கள்.

திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. நமது வாழ்க்கை முறையை அது முடிவு செய்கிறது.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ் படங்களை பார்த்து அதில் வரும் தமிழ் தான் உண்மையான தமிழ் என்றுநினைக்கிறார்கள். 2 நாட்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜாவை சந்தித்தேன். அப்போது எங்களைப் பற்றி மற்றவர்கள்மோசமாக விமர்சிப்பதாகக் கூறினார். அவர்களுக்கெல்லாம் புரிய வைப்பதற்காக விரைவில் ஒரு கூட்டத்தை கூட்டவிருக்கிறோம்.

அந்த கூட்டத்துக்கு திரையுலகினர் அனைவரையும் அழைக்கிறோம். கூட்டத்திற்கு டாக்டர் ராமதாசும் வர வேண்டும். நேரடியாகசந்தித்துப் பேசினால், பிரச்சினைகள் தீரும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X