பெசன்ட் நகர் கோயிலில் கடல் நீர் புகுந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை கடலில் இன்று காலை ஏற்பட்ட கொந்தளிப்பில் பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலட்சுமி கோயிலுக்குள் கடல் நீர் புகுந்தது.

சென்னை நகரில் இன்று காலை லேசான நில நடுக்கம், கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது. இதனால் நகரம் முழுவதும் பெரும் பீதி நிலவுகிறது.கடல் கொந்தளிப்பு காரணமாக, சென்னை நகரின் கடலோரப் பகுதிகளில் கடல் நீர் உள்ளே புகுந்தது.

மெரீனா கடற்கரையின் மணல் பரப்பு முழுவதும் கடல் நீர் பரவி காமராஜர் சாலைக்கும் கடல் நீர் பாய்ந்தது. இதனால் காலையில்வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் கார்களை நிறுத்தி விட்டு தப்பியோடினர். இதேபோல, வாக்கிங் சென்றவர்களும் பீதியடைந்துஓடினர்.

இதேபோல, பெசன்ட் நகரில் உள்ள பிரபலமான அஷ்டலட்சுமி கோயிலுக்குள் கடல் நீர் புகுந்தது. கடலோரத்தில் உள்ள இந்தக் கோயில்நல்ல உயரமான கட்டடத்தைக் கொண்டது. இருப்பினும இந்தக் கோயிலுக்குள் கடல் நீர் புகுந்ததால் பெசன்ட் நகர் பகுதி மக்கள்அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...