For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களை எரிச்சலூட்டும் போலீஸாரின் அலட்சியம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Waves brought cycle in treeகடல் கொந்தளிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்ட போலீசார் முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மீட்புப் பணிகளில் ராணுவத்தினர், கடற்படையினர், தீயணைப்புப் படையினர் ஆகியோர்ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிகளில் போலீசாரின் பங்கு குறைவாகவே உள்ளது.

பல இடங்களில் கையில் குச்சியை வைத்துக் கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்துவதோடு தங்கள் வேலை முடிந்துவிட்டது போன்றதோரணையில் தான் போலீசார் நடந்து கொள்கின்றனர்.

நிவாரணப் பணிகளும் சரிவர நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந் நிலையில் இறந்தவர்களின் உடல்களை முறையாகக் கணக்கிடாமல் அந்த எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதிலேயே போலீசார்குறியாய் இருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர் மக்கள்.

கடலோரங்களில் பிணக் குவியல்:

Waves break up electrical posts in Nellaiசென்னையில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை தமிழகத்தின் கடலோரங்கள் முழுவதுமே பிணக் குவியலாகவே காட்சி தருகிறது.

சிதிலமடைந்த வீடுகள், தூக்கி வீசப்பட்ட படகுகள், கரையோரத்தில் குவிந்து கிடக்கும் உடல்கள், குப்பை மேடாகிப் போன குடிசைப்பகுதிகள், கதறியழும் மக்கள், குழந்தைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்த குழந்தைகள், அனைத்தையும் இழந்து நிற்கும்குடும்பங்கள் என கடலோரக் காட்சிகள் கண்களை கலங்கடிக்கின்றன.

இதைவிடக் கொடூரமான காட்சிகளை மருத்துவமனையில் பார்க்க முடிகிறது. குவிந்து கிடக்கும் பிணங்களின் மத்தியில் தங்களதுகுடும்பத்தினர் இருக்கிறார்களா என ஆண்களும் பெண்களும் வந்து தேடுவதையும், உற்றவர்களின் உடலைக் கண்டவுடன் கதறித்துடிப்பதையும் காண சகிக்கவில்லை.

உடல்களை மொத்தமாக எரிக்க திட்டம்:

இந் நிலையில் மீட்கப்பட்டவர்களின் உடல்களை மொத்தமாக எரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான உத்தரவு அந்தந்தப் பகுதிகளில் உள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பலி வாங்கிய கிரிக்கெட்:

சென்னை உள்பட கடலோரங்களில் கிரிக்கெட் விளையாடி நூற்றுக்கணக்கான குழந்தைகள் இந்தக் கடல் கொந்தளிப்பால்பலியாகியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமையாதலால் காலையில் மணற் பரப்புக்கு வந்துவிட்ட சிறுவர்கள் கடலோரத்தில் ஜாலியாக கிரிக்கெட் விளையாடியபோதுதான் கடல் அலைகள் வந்து கபளீகரம் செய்துள்ளன.

கடற்கரை சாலை மூடல்:

Seaமெரீனா கடற்கரைக்கு பொது மக்கள் செல்வதைத் தடுக்க சென்னை கடற்கரைச் சாலையை நேற்றிரவு போலீசார் மூடிவிட்டனர். இன்றுகாலையில் தான் மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

மூட்டை முடிச்சுகளுடன்:

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கணககான மக்கள் வீட்டில் மிஞ்சிய பொருட்களுடன் கடலுக்கு எதிர் திசையில்நடந்தும், மீன் வண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலும் சென்ற வண்ணம் உள்ளனர்.

கடலின் சீற்றத்தால் அதிர்ந்துபோய்விட்ட மக்கள் மீண்டும் அதுபோன்ற கொந்தளிப்பு ஏற்படும் என்ற பயத்தால் முடிந்தவரை கடலை விட்டுதூரமாக சென்றுவிடும் நோக்கத்தில் வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X