For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி குறித்து வதந்தி; பரபரப்பு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து தமிழகத்தில் குறிப்பாக சென்னை நகர் முமுவதும் காட்டுத் தீ போல வதந்தி பரவிவருகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் உடல் நிலை குறித்து உளவுப் பிரிவு போலீசார் தான்வேண்டுமென்றே தவறான புரளியயைப் பரப்பி வருவதாக அக் கட்சியின் பொருளாளர் ஆற்காடு வீராசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இதய வலிகாரணமாக அடைக்கப்பட்டதாக முதலில் செய்தி வந்தது. ஆனால், அவர் இடுப்பு வலி விஷயமாகத் தான் சிகிச்சை பெற சேர்க்கப்பட்டதாகபின்னர் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில் கருணாநிதி குறித்து சென்னை நகர் முழுவதும் பெரும் வதந்தி பரவியுள்ள. இதனால் அண்ணா அறிவாலயம், கோபாலபுரம்பகுதிகளில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அப்பல்லோ மருத்துவமனை முன்பும் ஏராளமானதிமுகவினர் குவிந்துள்ளனர்.

ஆனாலும், கருணாநிதி உடல் நலத்துடன் இருப்பதாக திமுக தரப்பு கூறி வருகிறது.

கருணாநிதி குறித்து பரவிய வதந்தியால் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சில பகுதிகளில் திமுகவினர்கடைகளை மூடச் சொல்லி கடைக்காரர்களை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

புரளி:

இந் நிலையில் செய்தி நிறுவனங்களைத் தொடர்பு கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கருணாநிதிக்கு ஏதோ ஆகிவிட்டதாமே என்றுகவலையுடன் கேட்டவண்ணம் உள்ளனர்.

அப்பல்லோ விளக்கம்:

இதையடுத்து மருத்துவமனையின் சார்பில் அதன் இயக்குனர் சத்யபாமா ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கருணாநிதிக்குசிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலை தேறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாட்டீல் சந்திப்பு:

இந் நிலையில் சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியைச் சந்தித்துஉடல் நலம் விசாரித்தார். அப்போது அவரிடம் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்குத் தேவையான நிதியுதவியை மத்தியஅரசு வழங்க வேண்டும் என்று கருணாநிதி கேட்டுக் கொண்டார்.

மத்திய அரசு முழு அளவில் உதவி செய்யும் என்று பாட்டீல் கருணாநிதியிடம் உறுதியளித்தார்.

ஆற்காடு அறிக்கை:

இந் நிலையில் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில்,

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து தமிழக காவல்துறையின் உளவுத் துறையினர் திட்டமிட்டு பொய்ச் செய்தி பரப்பிவருகிறார்கள். இது விஷமத்தனமானது, தேவையற்றது.

கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் உள்ளார். பொதுமக்கள் எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கூறுகையில், 2 நாட்களுக்கு கருணாநிதி ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள்அறிவுறுத்தினர். தற்போது அவர் நலமுடன் உள்ளார் என்றார்.

முன்னதாக மத்திய அமைச்சர்கள் பழனிமாணிக்கம், ரகுபதி ஆகியோரை தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், ராஜா,வேங்கடபதி ஆகியோரை காஞ்சிபுரம், விழுப்புரம், பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மீட்புப் பணிகளைப் பார்வையிடுமாறுகருணாநிதி அனுப்பி வைத்தாாக திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X