For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4,000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தைத் தாக்கிய சுனாமி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

The scene in Rameshwarm beach
கடல்கோள் என தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் சுனாமி ஆழிப் பேரலை தமிழகத்தின் தென் கோடி நகரங்களை4,000 ஆண்டுகளுக்கு முன்பே ஒருமுறை விழுங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 26ம் தேதி தாக்கிய சுனாமி பேரலைகளால் பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர்.தமிழகத்தில் இதுவரை சுனாமி தாக்கியதே இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் 4,000 ஆண்டுகளுக்கு முன்பேதமிழகத்தை சுனாமி தாக்கியுள்ளது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

தமிழில் கடல்கோள் என்று அழைக்கப்படுகின்றது சுனாமி.

தமிழகம் என்று நாம் இப்போது சொல்லும் நிலப்பரப்பை விட பல மடங்கு பெரிய நிலப்பரப்பு தமிழகத்தின் தென்கோடியில் இருந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இன்றைய இலங்கை, மாலத்தீவு,தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அனைத்தும் ஒன்றாக இருந்தன.

இந்த நிலப்பரப்புக்கு லெமூரியா கண்டம் என்று பெயர்.

நம்தமிழ் இலக்கியங்கள் லெமூரியா கண்டத்தை குமரிக் கண்டம் என்று அழைத்தன.

வட இந்தியாவில் உள்ள இமயமலை போல தென்கோடி குமரிக் கண்டத்திலும் மிக உயர்ந்த மலை இருந்துள்ளது.இந்த மலைக்கு குமரிக் கோடு என்று பெயர். கோடு என்றால் மலை என்று பெயர்.

இதேபோல, இந்த மலையிலிருந்து உற்பத்தியான குமரியாறு, பரளியாறு ஆகியவை கங்கை, யமுனை போலவற்றாத ஜீவநதிகளாக ஓடி வளம் கொழித்தன.

இந்த குமரிக் கண்டத்தில்தான் மதுரை நகரம் (இப்போதைய மதுரை அல்ல) இருந்தது. இங்குதான் முதல் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.

The scene in Nagai
இந்தப் பகுதிக் கடலில் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடல் கோளில் (சுனாமி) மதுரை உள்ளிட்டலெமூரியாக் கண்டத்தின் பல பகுதிகள் அழிந்து விட்டன. அதன் பின்பு மிகவும் சிறிய நிலப்பரப்பாக சுருங்கியதுகுமரிக் கண்டம். பூம்புகாரின் பெரும் பகுதி அழிந்தது.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்கள் பிரிந்தன (குமரிக் கண்டத்துடனான இவற்றின் தொடர்பு கடலில்மூழ்கியது). உயரமான பகுதிகளான இலங்கை, மாலத்தீவு ஆகியவை தீவுகளாக கடலுக்கு வெளியே எட்டிப்பார்த்தபடி நின்றன.

இந்த பேரழிவுக்குப் பின்னர் தான் பாண்டிய மன்னர்கள் தங்களது தலைநகரை கபாடபுரத்திற்கு மாற்றினர்.

இந்தப் பகுதியிலும் சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சுனாமி தாக்கியது. இதில் மிச்சமிருந்த நிலப் பரப்பும்அழிந்தது. அதன் பிறகே பாண்டியர்கள் கடல் பகுதியில் இருந்து பல நூறு கிமீ உள்வாங்கிய பகுதியானதற்போதைய மதுரைக்கு இடம் பெயர்ந்தனர்.

பூம்புகாரில் கடல் கோள் ஏற்பட்டது குறித்து இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் மிக விரிவாகவேவிளக்கப்பட்டுள்ளது.

மேலும் continental drifts எனப்படும் கண்டத் திட்டுக்களின் தோற்றம் குறித்த ஆய்வாளர்களும் தமிழகம்உள்ளிட்ட இந்தியப் பகுதிகளை பேரலைகள் இதற்கு முன் தாக்கியதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X